586மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
  

மூன்று கோடியோடு,  செறிவுற்ற - சேர்க்கப்பட்ட, இலக்கமெண்பத்து
நான்கொடு  -   எண்பத்து   நாலு   லட்சத்தோடாகிய,   ஓசனை -
நூற்றறுபத்து    மூன்று    கோடியே  யெண்பத்து   நாலு   லட்சம்
யோஜனைகள், மறுவற்ற -  குற்றமற்ற,  தீவத்து  -  அந்த நந்தீஸ்வர
த்வீபத்தின், உள் உள்ளேயாகிய,  அகலம்  -  அகலமாக,  ஆகும் -
ஆகாநின்றது, எ-று. (206)

 1254. நிலங்கள்பொன் மணிகளா னிறைந்தி ருந்தன
      விலங்கலுங் கயங்களும் வீத ராகரைப்
      புலங்களால் வெல்வன போக பூமியோ
      டிலங்குவா னவரிடந் தன்மை யேசுமே.

   (இ-ள்.)   நிலங்கள் -  அந்த  நந்தீசுவர  த்வீபத்தின்  பூமிகள்,
பொன் - ஸ்வர்ணங்களினாலும், மணிகளால் - இரத்தினங்களினாலும்,
நிறைந்ததிருந்தன   -   நிறைவு   பெற்றிராநின்றன,   விலங்கலும் -
அதிலிருக்கும்   பர்வதங்களும்,   கயங்களும்   -    தடாகங்களும்,
வீதராகரை  - ஆசையற்றவர்களையும், புலங்களால் - விஷயங்களால்,
வெல்வன  -  ஜெயிக்கப்பட்டன  போன்று  மிகுதியும் அழகுடையன
வாயிரானின்றன,       (இப்படிப்பட்ட       அழகுடையதாகையால்
அந்தத்வீபமானது),   போக   பூமியோடு   -   போக  பூமியோடும்,
(அதுவல்லாமலும்), இலங்கும் -  விளங்காநின்ற, வானவரிடந் தன்னை
- தேவருலகத்தினையும், ஏசும் - இகழ்ச்சி பண்ணும், எ-று (207)

 1255. கண்ணையும் மனத்தையுங் கவர்ந்து கொள்வன
      வண்ணமே கலையினார் வடிவு போலவே
      விண்ணவர்க் கிறைவரும் விடாத வேட்கைய
      வெண்ணிலா விடங்களா லியன்றி ருந்ததே.

     (இ-ள்.)      கண்ணையும்    -     பார்க்கின்றவர்களுடைய
நேத்திரங்களையும்,      மனத்தையும்    -       இருதயத்தையும்,
கவர்ந்துகொள்வன  -  கிரஹித்துக்   கொள்வனவாகி,   வண்ணம் -
வர்ணம் பொருந்திய,  மேகலையினார்  -  மேகலாபரணத்தையுடைய
ஸ்த்ரீமார்களுடைய,  வடிவுபோலவே    -   ரூபத்தைப்   போலவே,
விண்ணவர்க்கிறைவரும்  -  தேவேந்திரர்களும்,  விடாத  - நீங்காத,
வேட்கைய     -   ஆசையையுடையவைகளாய்,    எண்ணிலா   -
அஸங்கியாதமாகிய, இடங்களால் - லாவண்யமுடைய ஸ்தானங்களால்,
இயன்று - இசைந்து, இருந்தது - இராநின்றது, எ-று. (208)

 1256. இலதைவல் லிகண்மணி யாலி யன்றுதன்
      சலதிசூழ் போயது தரணி மூன்றுடை
      யுலகினுக் கிறைவனா லயங்க ளாலிம்மூ
      வுலகினுக் கிறைமைகொண் டோங்கு கின்றதே.