சமவசரணச்சருக்கம்587


Meru Mandirapuranam
  

   (இ-ள்.) (இன்னும்  இத்தீவானது),  இலதை - இலைக்கொடிகளும்,
வல்லிகள்  -   கோல்கொடிகள்       முதலாகிய     கொடிகளும்,
மணியாலியன்று  -     (அலங்கிருதமாகும்படி)    இரத்தினங்களால்
அமைந்ததாகி, தன் சலதி -  தன்னுடைய நந்தீச்சுவர சமுத்திரமானது,
சூழ் போயது - தன்னைச்  சூழ்ந்திராநின்றதாகி,  தரணி மூன்றுடை -
அதோ மத்திம  ஊர்த்துவபேதத்தால்  மூன்று  பீரகாரமானதரணியை
உடைய, உலகினுக்கு  - இந்த லோகத்துக்கு, இறைவன் - நாதனாகிய
அருகபரமனுடைய,      ஆலயங்களால்   -     கோயில்களினால்,
இம்மூவுலகினுக்கு - இந்த மூன்று லோகத்துக்கும், இறைமை கொண்டு
- மேலான     தன்மையைக்       கொண்டு,      ஓங்குகின்றது -
உயர்வடைந்திராநின்றது, எ-று. (209)

 1257. பண்சிறைக் கிடந்தசொற் பாவை மாருடன்
      விண்சிறைக் களமென விட்டு வீரனை
      வண்சிறப் போடுவந் தடைந்த வானவர்
      கண்சிறைப் படுவது காமர் பூமியால்.

    (இ-ள்.)   பண்  -  கீதமானது,   சிறைகிடந்த   -   தங்குதல்
கொண்டிராநின்ற,   சொல்   - வசனத்தையுடைய, பாவைமாருடன் -
சித்திரப்பாவைக்குச்        சமானமாகிய        தேவஸ்த்ரீகளுடன்,
(கூடிக்கொண்டு),   விண்  -   தேவலோகமானது, சிறைக்களமென -
சிறைச்சாலைக்குச்   சமமாகுமென்று,  விட்டு -  அத்தேவலோகத்தை
விட்டு,    வண்   -    வளப்பம்    பொருந்திய,   சிறப்போடும் -
பூஜாத்திரவியாதி சிறப்புகளோடு,  வந்து -  அங்கேவந்து,  வீரனை -
அங்குள்ள  கோயிலில்  வீற்றிருக்கின்ற  ஜினேந்திரப்  பிரதிமையை
(பூஜிக்கும்படியாக),     அடைந்த    -     சேர்ந்த,    வானவர் -
சதுர்ணிகாயாமரர்களின், கண் - கண்கள், காமர் -  அழகிய, பூமியால்
- அப்பூமியால்,   சிறைப்படுவது -  தங்குதல்  கொள்ளப்படுவதாகும்,
எ-று. (210)

  1258. அஞ்சன மலைசணான் காகு மாங்கதன்
       மங்சிலா மாதிசை நடுவ ணின்றன
      வஞ்சன மூலமா யகன்று யர்ந்தன
      வெஞ்சிலா யிரம்புகை நான்கொ டெண்பதே.

     (இ-ள்.)      மஞ்சிலா - குற்றமில்லாத, ஆங்கதன் -  அங்கு
அந்த நந்தீசுவரத் வீபத்தினுடைய, மா - பெருமை பொருந்திய, திசை
- மகாதிக்கு    பூமிகளில்,   நடுவண்  -   மத்தியிலே,  நின்றன -
நின்றனவாகிய,       அஞ்சனமலைகள்    -     அஞ்சனமென்னும்
பெயரையுடைய   பர்வதங்கள்,   நான்காகும்  -  (கிழக்கில்  ஒன்று
தெற்கில் ஒன்று  மேற்கில்  ஒன்று  வடக்கில்  ஒன்று  ஆக)  நாலு
பர்வதங்களாகும்,  எஞ்சலில்  -  குறைவில்லாத,  அஞ்சனம் - அந்த
அஞ்சன பர்வதங்கள், ஆயிரம் புகை நான்கோடெண்பது - எண்பத்து
நாலாயிரம் - யோஜனைகள், மூலமாயகன்று -