588மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
  

அடியாய்விசாலித்து,   உயர்ந்தன -  எண்பத்துநாலாயிரம் யோஜனை
யுயர்ந்திராநின்றன, எ-று. (211)

 1259. மற்றிந்த மலையின்மா திக்கின் வாவிகள்
       பெற்றியாற் கிடந்தன பெரிய சாலவு
      முற்றுநீர் சூழ்தலாற் றதிமு கங்களென்
      றுற்றபேர் மலைகளத் தடத்தி னுள்ளவே.

   (இ-ள்.)  மற்று - பின்னையும், இந்த - இப்போது சொல்லப்பட்ட
இந்த,   மலையின்  -  ஒவ்வொரு  அஞ்சன   பர்வதங்களினுடைய,
மாதிக்கில்    -  (கிழக்கு  தெற்கு  மேற்கு  வடக்கென்னும்)   நாலு
திக்குகளிலும், சாலவும் பெரிய - மிகவும் பெரியனவாகிய, வாவிகள் -
தடாகங்கள்,  பெற்றியால்  -  உயர்ந்த  தன்மையோடு,   கிடந்தன -
இராநின்றன,    அத்தடத்தின்   - அந்தத் தடாகங்களின் மத்தியில்,
முற்றும்  -     எப்பக்கங்களிலும்,   நீர்   சூழ்தலால்   -   ஜலஞ்
சூழ்ந்திருப்பதால், ஏதிமுகங்களென்று - ததிமுகங்களென்று, பேர்உற்ற
- பெயரையுடைய,  மலைகள்  -  பர்வதங்கள், உள்ள - இராநின்றன,
எ-று. (212)

 1260. ஆயிரம் புகைபத்தை யகன்று யர்ந்தன
       வாய்மையா னீரின்மேல் வரைகள் வாவியின்
       சூழுந்தான் கிடந்தநால் வனங்க டம்பெய
       ரேழிலைச் சண்பகந் தேமாவ சோகமே.

     (இ-ள்.)      நீரின்மேல் -  (அத்தடாக மத்தியில்) ஜலத்தின்
மேல்,   வாய்மையால்  -   வாய்த்த   தன்மையினால்,  வரைகள் -
(இராநின்ற)  ததிமுக   பர்வதங்களானவை,  ஆயிரம்  புகைபத்தை -
பதினாயிரம்   யோஜனைகள்,   அகன்று  -   அகலமுடையனவாகி,
உயர்ந்தன - அவ்வளவு உயரத்தையும் உடையனவாகும், வாவியின் -
அத்தடாகங்களை,    சூழுந்தான்    கிடந்த    -    நாலுதிக்கிலும்,
சூழ்ந்திராநின்ற, நால்வனங்கள் -  நாலு  வனங்களாகும்,  தம் பெயர்
அவ்வனங்களின்  பெயர்,  ஏழிலை  -  ஏழிலைம்   பாலைவனமும்,
சண்பகம் -  சண்பகவனமும்,  தேமா  -  மாவனமும், அசோகமே -
அசோகவனமுமாகும், எ-று. (213)

 1261.  வனத்திடைப் புறம்படி வாவி கோணத்தின்
       மனத்தினுக் கிரதிசெய் மலைக ணின்றன
       தனக்குயர் வகலமா யிரங்க ளோசனை
       யெனைப்பல விடங்களா லிரதி செய்யுமே.

    (இ-ள்.)  வனத்திடை  -   அந்த   வனங்களின்,   புறம்படி -
பாஹ்யபூமியில்  (அதாவது  :  வெளியில்),   வாவி  -   ஒவ்வொரு
தடாகங்களினுடையவும், கோணத்