தின் -
வெளி மூலைகளிரண்டிலும்,
மனத்தினுக்கு -
பார்க்கின்றவர்களுடைய மனதிற்கு,
இரதிசெய் - ரதியைச்
செய்யும்படியான, மலைகள் - ரதிகரபர்வதங்கள்,
நின்றன -
நிலைபெற்றுள்ளன (அதாவது : ஒவ்வொரு தடாகத்தின்
வனங்களின்
பாஹ்ய மூலைகளில் ஒவ்வொன்றாக இரண்டு
மூலைக்கும் இரண்டு
பர்வதமாய் நாலுபக்கங்களிலும்
உள்ள தாடாகங்களுக்கும்
அமைந்திருந்தன, தனக்கு - அந்த ரதிகரபர்வதம் ஒவ்வொன்றிற்கு,
உயர்வு - உன்னதமும், அகலங்கள் - அகலமும், ஆயிரங்களோசனை
- ஆயிரம் ஆயிரம் யோஜனைகளாகும், எனை பல விடங்களால் -
(அந்த நந்தீசுவரத்வீபம்) இன்னும் பல விடங்களின் அழகுகளாலும்,
இரதி செய்யும் - பார்க்கின்றவர்களுக்கு ஆஹ்லாதத்தைப்
பண்ணும்,
எ-று.
‘ஏனை? என்பது, ‘எனை? எனக் குறுகி வந்தது. (214)
1262. மலைநல மணிபொனின் மயம தாகிய
பலவடி வுடையன பரமன் கோயில்க
ணிலவிய மகுடமா யிலங்கும் பாரிலும்
மலையிதும் மாயிரம் புகைக ளாழ்ந்தவே.
(இ-ள்.)
மலை - (அந்த நந்தீசுவரத்வீபத்திலுள்ள,
அஞ்சன,
ததிமுக, ரதிகரமென்னும்) பர்வதங்களின் மேல், நல - நன்மையாகிய,
மணிமயம் - இரத்தின மயங்களும், பொனின்மயமதாகிய -
சுவர்ண
மயங்களுமாகிய, பல - பலவாகிய, வடிவுடையன -
இலக்ஷண
ரூபங்களையுடையனவாகிய, பரமன் -
ஜினேந்திரனாகியஅருக
பரமனுடைய, கோயில்கள் - ஸ்ரீசைத்யாலயங்கள்,
நிலவிய -
பிரகாசிக்கப்பட்ட, மகுடமாயிலங்கும்
- கிரீடம்போல விளங்கும்,
மலையிதும் - இப்பர் வதங்களெல்லாம்,
பாரிலும் - பூமியிலும்,
ஆயிரம் புகைகள் - ஆயிரம்
யோஜனைகள், ஆழ்ந்த -
ஆழ்ந்திராநின்றன, எ-று (215)
1263. வனங்களுந் தடங்களும் மலையின் மாமணித்
தலங்கண்மே னின்றன தமனி
யத்தியன்
றிலங்குதோ ரணமுடை வேதி சூழ்ந்துநல்
லலங்கலார்ந் தருமணி யாலி யன்றவே. (இ-ள்.)
வனங்களும் - அந்தநந்தீசுவர த்வீபத்திலிராநின்ற
வனங்களும், தடங்களும் - தடாகங்களும், மலை - பர்வதங்களும்,
இன் - இனிமையாகிய, மா - பெருமை
பொருந்திய, மணி -
இரத்தினத்தினாலாகிய, தலங்கண் மேல் - பூமியின் மேலே, நின்றன
- இராநின்றன, (ஆலயங்கள்), தமனியத்தியன்று
- ஸ்வர்ணத்தினால்
செய்யப்பட்டு, இலங்கும் -
பிரகாசியாநின்ற, தோரணம் -
தோரணங்களை, உடை - உடையதாகிய, (வழிகளையுடைய), வேதி
சூழ்ந்து - மதில்களினால் சூழப்பட்டு,
நல் - நன்மையாகிய,
அலங்கலார்ந்து - மாலைகளினால் நிறைந்து, அரும் - அரிதாகிய,
மணியால் - இரத்தினங்களினால், இயன்ற
- அமைந்திராநின்றன, எ-று.
|