590மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
  

 1264. மஞ்சன வஞ்சன மலையு நான்குள
      வெஞ்சிடாத் ததிமுகத் தீரெட் டாகுமே
      வஞ்சிபோ லிரதி கரத்தெண் ணான்குள
      மஞ்சிலா தனநல வாமன் கோயிலே.

    (இ-ள்.)      மஞ்சன  -  மேகம்போல்  கருப்பு  நிறமுடைய,
அஞ்சன மலையும் - அஞ்சன பர்வதங்களும், நான்கு - நாலு, உள -
உண்டாயிராநின்றன, எஞ்சிடா - குறைவில்லாத, ததிமுகத்து - ததிமுக
பர்வதங்களில்,  ஈரெட்டாகும்  - பதினாறாகும், வஞ்சிபோல் - கொடி
போலச்   சுற்றியிராநின்ற,   இரதிகரத்து  -   இரதிகரபர்வதங்களில்,
எண்ணான்கு - முப்பத்திரண்டாகும், (இந்தப் பர்வதங்களின்  மேலே),
மஞ்சிலாதன - குற்றமில்லாதனவாகிய, நல - நன்மையாகிய, வாமன் -
ஜினேந்திரனுடைய, கோயில் -  ஸ்ரீ  சைத்யாலயங்களானவை, உள -
உண்டா யிரா நின்றன, எ-று. (217)

 1265. ஆயத மைம்பதிற் றிரட்டி யோசனை
      யாயதங் கால்குறைந் தல்ல தோக்கமா
      மாயதந் தன்னரை யகல மாயின
      வாயின்மூன் றுடையமுன் மண்ட பங்களாம்.

     (இ-ள்.)     ஆயதம்    -    (அந்த    சைத்யாலயங்களின்
சுற்றுமதிலுள்பட) நீளமானது,  ஐம்பதிற்றிரட்டி  யோசனை  -  நூறு
யோஜனைகளாகும்,    ஓக்கம்   -    கோபுரசிகரத்தினோடுங்கூடிய
உன்னதமானது,  ஆயதம்  -  நீளமாகிய  நூறு யோஜனையில், கால்
குறைந்து  -  நாலில்  ஒன்று  குறைந்து,  அல்லது  -   மீந்ததாகிய
எழுபத்தைந்து  யோஜனை, ஆம் - ஆகும், அகலம் - அகலமானது,
ஆயதந்தன்னரையாயின    -    நீளத்தில்    பாதியாகிய   ஐம்பது
யோஜனைகளாகும்,   (இப்படி    விஸ்திர்ணமாகி   அளவையுடைய
மதிலுக்குள்),      வாயில்       மூன்றுடைய     -       மூன்று
வாசற்படிகளையுடையதாகிய,    முன்மண்டபங்களாம்  -   (கிழக்குப்
பார்த்ததாகிய) கந்தகுடி மண்டபங்களையுடைய  பிரதம மண்டபங்கள்
அல்லது பீடிகா மண்டபங்களாகும், எ-று. (218)

 1266. மாலையுஞ் சாலங்கள் வாச மார்ந்தவுஞ்
      சாலவுந் தாழ்ந்துள வாச லின்புடைப்
      பாலிகை முதல்பரிச் சந்தங்க ணூற்றெட்டு
      மாலைவேய்ந் தனபல மலிந்தி ருந்தவே.

    (இ-ள்.) வாசலின் - (அந்தக் கந்தகுடி மண்டபங்களின்) மூன்று
வாசற்படிகளினுடையவும்,  புடை - இருபக்கங்களிலும், வாசமார்ந்த -
வாஸனைகளால் நிறைந்திரா  நின்றனவும், மாலையும் - மாலைகளும்,
சாலவும் - மிகவும், தாழ்ந்து -