சமவசரணச்சருக்கம்591


Meru Mandirapuranam
  

தொங்கப்பட்டு, சாலங்கள் - சன்னல்கள், உள - உண்டாயிராநின்றன,
(அவையல்லாமலும்  அம்மண்டபத்தைச்  சூழ்ந்து),  பாலிகை முதல் -
பாலிகை   முதலாகிய, நூற்றெட்டுப்  பரிச்சந்தங்கள்  -  நூற்றெட்டு
மங்கலக்   கருவிகள்,   மாலை   -   ஒழுங்காக,     வேய்ந்தன -
அணியப்பட்டன,  பல  -  இன்னும்    அனேக   உபகரணங்களும்,
மலிந்திருந்த - நிறைந்திராநின்றன, எ-று. ‘ஆர்ந்தவும்? என்பதில், உம் -
அசை. (219)

 1267. ஆலயத் தளவதா யமைந்து கோயின்முன்
      பாலிருந் தனபல பல்ல வாதியா
      மாடலும் பாடலு மமர்ந்து காண்பவ
      ரூடுசென் றனவல வுழைக்க லத்தவே.

   (இ-ள்.)  கோயில் -  இந்த  அக்கிருத்திம  சைத்யாலயங்களின்,
முன்பால் - முன்னே கிழக்குப்பக்கத்தில்,  ஆலயத்து  - கந்தகுடிகள்
இராநின்ற ஆலயத்தினுடைய, அளவதாய் - பிரமாணமாகி,  அமைந்து
- பொருந்தி,  பல  -  பலவாகிய,  பல்லவாதியாம்  -  அரங்கங்கள்
முதலானவைகளாம், (அவைகளில்),  ஆடலும்  -    நர்த்தனங்களும்,
பாடலும்  -  ஸங்கீதங்களும்  (இன்னும்  அனேக  வாத்தியங்களும்),
அமர்ந்து   -    பொருந்தி,   காண்பவர்  -   பார்க்கின்றவர்களும்,
ஊடுசென்றன    -   இவைகளையெல்லாந்   தன்னுள்ளேயடைந்திரா
நின்றனவாகிய, வல - பலம் பொருந்திய, உழைக்கலத்த - உழைக்கல
மண்டபங்கள், இருந்தன - இராநின்றன, எ-று.

 1268. இஞ்சிக ளம்பொனா லியன்ற கோபுர
      முன்சொன வளவினான் முடிந்த மாதிசை
      யஞ்சொலார் முகமென விருந்த வத்தொடு
      வஞ்சிமே கலையென வந்து சூழ்ந்ததே.

     (இ-ள்.)  இஞ்சிகள் - அக்கோயிலின்   சுற்றுமதில்களானவை,
அம் -  அழகிய,  பொன்னாலியன்று - ஸ்வர்ணத்தினால்  அமைந்து,
முன் - முன்னாலே, சொன்ன - சொல்லப்பட்ட, அளவினால் - அகல
நீள  வளவினால்,  முடிந்த -  முடிந்திராநின்றன, மாதிசை - (கிழக்கு
தெற்கு  மேற்கு  வடக்கு  என்னும்)  மஹா  திக்குகளில்  மத்தியில்,
கோபுரம்  - கோபுரங்களானவை,  அம்  -  அழகிய,   சொலார் -
சொல்லையுடைய ஸ்த்ரீமார்களின், முகமென - முகம்போல (அழகாக),
இருந்த  -  இராநின்றன,  அத்தொடு  - அந்த அமைப்போடு, (முன்
சொன்னமதில்களின்   வளைவானது),  வஞ்சி  -    ஸ்த்ரீயினுடைய,
மேகலையென  -  மேகலாபரணம்  போல,  வந்து  -  சுற்றி  வந்து,
சூழ்ந்தது - சூழ்ந்திராநின்றது, எ-று. (221)