1269. உகப்புடை பெயர்ச்சி யீற்றி னும்முதல் மனித ரோக்கம்
யுகத்தினுக் கிறைவர் தோற்ற முள்ளிட மலாத தேசம்
சகத்தது வடிவு தீப சாகரந் தனதி டக்கை
நகத்தவர் நாகர் மக்கள் விலங்குறை ஞாலங் காட்டும்.
(இ-ள்.)
உள் - அந்த உழைக்கல மண்டபத்தினுள்ளே,
இடமலாத தேசம் - வெற்றிடமில்லாத பிரதேசமானது,
உகப்புடை
பெயர்ச்சி - (உத்ஸர்ப்பிணி
அவஸர்ப்பிணியாகிய)
யுகப்பிரளயங்களுடைய காலஸ்வரூபத்தையும், ஈற்றினும்
முதல் -
உத்ஸர்ப்பிணி அவஸர்ப்பிணி காலங்களினுடைய
கடைசியிலும்
முதலிலும், மனிதரோக்கம் - மனுஷ்யர்களுடைய உன்னதங்களையும்,
யுகத்தினுக்கு - அந்தக் காலங்களுக்கு,
இறைவர் தோற்றம் -
ஸ்வாமிகளாகப்பட்டவர்கள் பிறக்கும் விதமும்,
சகத்தது வடிவு -
லோகத்தினுடைய வடிவங்களையும், தீபசாகரந்தன
திடக்கை -
அஸங்கியாத த்வீப ஸமுத்திரங்களினுடையவும்
அவைகளிடம்
இருக்கப்பட்டவைகளுடையவும் ஸ்வரூபங்களையும்,
நகத்தவர் -
விஜயார்த்த பர்வதவாஸி வித்தியாதரர்களுடைய ஸ்வரூபமும், நாகர் -
தேவர்களுடைய ஸ்வரூபமும், மக்கள்
- மனுஷ்யர்களுடைய
விவரங்களும், விலங்கு - திரியக் ஜீவன்களுடைய ஸ்வரூபமும், உறை
- இவைகளெல்லாம் தங்கும்படியான, ஞாலம்
- பூமிகளின்
விவரங்களையும், காட்டும் -
தெரிவிக்கும், (அதாவது :
இவைகளெல்லாம் அதில் எழுதப்பெற்றிருக்கும்), எ-று. (222)
வேறு.
1270. துறக்கத்தும் வீட்டினும் தோன்றி னாரெய்துஞ்
சிறப்பது விகற்பமுந் தீயநல் வினைகளிற்
பிறப்பதுங் கதிகளிற் பெயரும் பெற்றியுங்
குறித்தன புராணத்தாற் கூறு கின்றவே.
(இ-ள்.)
(இன்னும் அவ்விடங்கள்),
துறக்கத்தும் -
தேவருலகத்திலும், வீட்டினும் - மோக்ஷத்திலும்,
தோன்றினார் -
போய்த்தோன்றியவர், எய்தும் -
அடைகின்ற, சிறப்பது -
பெருமையினுடைய, விகற்பமும்
- விகல்பங்களையும்,
தீயநல்வினைகளில் - பாபபுண்ணியங்களினால்,
கதிகளில் -
சதுர்கதிகளில், பிறப்பதும் - பிறக்கின்ற
விதமும், பெயரும் -
இப்படிப் பிறக்கும்படியான தன்மையினின்று நீங்கி
மோட்சமடைகின்ற,
பெற்றியும் - பெருமையும், புராணத்தால்
- ஆகமபுராணத்தால்,
குறித்தன - எழுதப்பட்டனவாகி, கூறுகின்ற
- சொல்வதைப்போல
(பார்க்கின்றவர்களுக்குத்) தெரிவிக்காநின்றன, எ-று. (223)
|