சமவசரணச்சருக்கம்593


Meru Mandirapuranam
  

 1271. கண்டவர் காட்சியைத் தூப்பஞ் செய்துடன்
      பண்டுசெய் தீவினைப் பரப்பைத் தீர்ப்பன
      வண்டுறை பிண்டிநல் வாமன் சேவடி
      கண்டவர் செயுஞ்சிறப் பைந்துங் காட்டுமே.

    (இ-ள்.)      (இன்னும்)    கண்டவர்  -   அந்த  உழைக்கல
மண்டபத்திலெழுதியிருக்கப்பட்ட         இவைகளை    யெல்லாம்
பார்க்கின்றவர்களுக்கு,   காட்சியை  - தரிசனத்தை, தூப்பஞ்செய்து -
சுத்தஞ்செய்து,   உடன்   -   உடனே,  பண்டுசெய்  -  பூர்வத்தில்
செய்யப்பட்ட,   தீவினைப்பரப்பை  -   தீவினைகளின்  கூட்டத்தை,
தீர்ப்பன - நீக்கப்பட்டனவாகியும்,  வண்டு  -  வண்டுகள்,  உறை -
தங்குகின்ற,  பிண்டி  - அசோக விருட்சத்தின் கீழ் எழுந்தருள்கின்ற,
நல் - நன்மையாகிய,  வாமன் - அருகபரமனுடைய, சேவடி - சிவந்த
திருவடிகளை, கண்டவர் -  பார்க்கின்றவர்கள்,  செயும் - செய்கின்ற,
சிறப்பைந்தும் -  பஞ்சகல்யாண  பூஜைகளின்  விதிக்கிரமங்களையும்,
காட்டும் - அம்மண்டபம் தெரிவிக்கும், (அதாவது : அம்மண்டபத்தில்
இவையெல்லாம் விளங்க எழுதப்பட்டிருக்கும்), எ-று. (224)

 1272. உழைக்கல மண்டப முன்பு தூபையாந்
      தழைத்தெழு சேதியத் தருமுன் னின்றது
      அழைப்பதி லாடும்வை சயந்தை யாங்கொடி
      வழக்கின்மா னத்தம்ப மெய்த வந்ததே.

     (இ-ள்.)     முன்பு - அந்தக் கந்தகுடி மண்டபங்களிராநின்ற
மண்டபத்தின் எதிரிலே (அதாவது : கிழக்கில்), உழைக்கல மண்டபம்
- இப்போது சொன்ன உழைக்கல மண்டபமாகும்,  (அதன் கிழக்கில்),
தூபை - ஸ்தூபையானது, ஆம் -  ஆகும்,  முன் - அதன் முன்னே,
தழைத்து - தளிர்களால் நிறைந்து, எழும் -  உண்டாகிய, சேதியத்தரு
- சைத்ய  விருட்சமானது,  நின்றது -  இராநின்றது,  (அதனெதிரில்),
அழைப்பதில்   -    வரப்பட்டவர்களை    அழைப்பது     போல,
வைசயந்தையாம் -  வைஜயந்தை  யென்கிற,  கொடி - துவஜமானது,
ஆடும்  -  அசையாநின்றது,   வழக்கின்   -  இப்போது  சொன்ன
வரிசையாகவே,    (இவற்றின்     கூட்டம்),        மானத்தம்பம் -
மானஸ்தம்பத்தை,     எய்த   -   அடையும்படியாக,     வந்தது -
வந்திராநின்றது, எ . று. (225)

 1273. கோபுரத் தின்புறங் குணக்க தாந்திசை
      வாபிமா னந்தையா மாசி லாதநீர்
      பூவினா னிறைந்துபொன் மணியி னாயதோர்
      சோபனஞ் சூழ்ந்தவே திகைத்து மாகுமே.