(இ-ள்.)
கோபுரத்தின் -
கீழ்த்திசையில் மதிலின்
கோபுரத்தினுடைய, புறம் - வெளியில்,
குணக்கதாந்திசை -
நேர்கிழக்குத் திக்கில், நந்தையாம் - நந்தையென்று
பெயருடைய,
வாபி - தடாகமானது, மாசிலாத -
களங்கமில்லாத, நீர் -
ஜலத்தினாலும், பூவினால் - புஷ்பங்களினாலும், நிறைந்து
-
ஸம்பூர்ணமாகி, பொன் -
ஸ்வர்ணத்தினாலும், மணியின் -
ரத்தினங்களினாலும், ஆயது - ஆகியதாகிய,
ஓர் - ஒப்பற்ற,
சோபனம் - படிகளால், சூழ்ந்த -
சூழ்ந்ததாகிய, வேதிகைத்து -
சுற்றுமதில் மண்டபங்களையுடையதாய், ஆகும் - அமைந்ததாகும்,
எ-று.
வேறு.
1274. கந்தகுடி மண்டபங்க ணூற்றெட்டவை காணிற்
பந்தியொரு மூன்றுநிரை யாகிவைடூ ரியத்
தம்பமிசை யிருந்ததல மூன்றுடைய தாமு
மந்தரங்க டம்மிடை
யனேகஞ்சிலை யாமே.
(இ-ள்.)
கந்தகுடி மண்டபங்கள் - (இந்த
அக்கிருத்திம
சைத்யாலயத்துள் இராநின்ற) கந்தகுடி மண்டபங்கள், நூற்றெட்டு -
நூற்றெட்டாகும், அவை - அவைகளை, காணில் - பார்க்குமிடத்தில்,
பந்தியொரு மூன்று நிரையாகி - தெற்கு
வடக்காய் முப்பத்தாறு
முப்பத்தாறாகமூன்று வரிசையாகி, வைடூரியத் தம்பமிசை
- வைடூரிய
ரத்தினத்தாலாகிய நாலு ஸ்தம்பங்களின்மேலே,
இருந்த - இராநின்ற,
தலமூன்றுடைய - மூன்று நிலையையுடைய ஸ்தூபியுஞ்
சிகரமுமாகி
இராநின்றன, தாமும் - அந்தக் கந்தகுடிகள் தாமும், தம்மிடை -
தங்களுள் ஒன்றுக்கொண்டு இடையில், அந்தரங்கள் -
இடம்விட்ட
வெளிகள், அனேகம் - பலவாகிய, சிலையாம் - வில்லுகளாம்,
எ-று. (227)
1275. செம்மணிமண் டபத்தினிடைச் சீயவணை மீது
வம்மலையின் மிசையிருந்த வருக்கனவன் போல
வெம்மைவினை யுங்கெட
விருந்ததிரு வுருவந்
தம்மளவைஞ் ஞூறுதனு வாகியுயர்ந் தனவே. (இ-ள்.)
செம் -
செவ்விதாகிய,
மணி -
இரத்தினங்களாலாகிய, மண்டபத்தின்
- அந்தக் கந்தகுடி
மண்டபங்களினுடைய, இடை - மத்தியிலே,
சீயவணை மீது -
ஸிம்மாஸனத்தின்மேல், அம்மலையின்மிசை
- அந்தப் பர்வதத்தின்
மேலே, இருந்த - இராநின்ற, அருக்கனவன்போல - சூர்யன்போல,
வெம்மை - பொல்லாங்காகிய, வினையுங்கெட
- வினைகளெல்லாம்
நீங்குபடியாக, இருந்த - இராநின்ற,
திருவுருவம் தம் - அழகிய
ஜினேந்திர பிரதிமைகளின், அளவு -
பிரமாணமானது, ஐஞ்ஞூறு
தனுவாகி - ஐந்நூறு வில்லளவாக, உயர்ந்தன
- உன்னதமாகிக்
கிழக்கு முகமாகப் பல்லியங்காஸனமாக இராநின்றன, எ-று. (228)
|