சமவசரணச்சருக்கம்595


Meru Mandirapuranam
  

 1276. இருமருங்குஞ் சாமரைக ளியக்கரொடு மியக்க
      மருவியமண் டலமும்மலர்ப் பிண்டியுமுக் குடையும்
      விரைமலர்கள் சொரிந்தமர ரேத்தவினை நீங்க
      பரவுகணம் பன்னிரண்டுஞ் சூழ்ந்திருந்த வாங்கே.

    (இ-ள்.)      ஆங்கே -  அந்த  ஜினேந்திரப் பிரதிமைகளின்
இடத்தே,  இரு  மருங்கும்  -  இரண்டு  பக்கத்திலும், சாமரைகள் -
வெண்சாமரைகளை,  இயக்கர் -  யக்ஷதேவப் பிரதிமைகள், இயக்க -
வீசுவது போல்  அமைந்திருக்க,  மண்டலமும்  - பிரபாமண்டலமும்,
மலர் - புஷ்பங்களோடு கூடிய,  பிண்டியும் -  அசோக விருட்சமும்,
முக்குடையும் - சத்திரத்திரயமும், மருவிய - சேர்ந்திராநின்றன, விரை
- வாசனை பொருந்திய, மலர்கள் - புஷ்பங்களை,  சொரிந்து - தூவி,
அமரர் - தேவர்கள் வந்து,  ஏத்த  - ஸ்தோத்திரம் செய்ய, வினை -
பாவங்கள், நீங்க - கெட, பரவு - ஸ்துதிக்கின்ற, கணம்  பன்னிரண்டு
- த்வாதிர்ம்சதீந்திர கணங்கள், சூழ்ந்திருந்த - சூழ்ந்திருந்தன, எ-று.

வேறு.

 1277. ஞாலமோர் மூன்றுடை யானது மைமையின்
      மேலெழு காதல் தேவர் விரும்பியுங்
      காலம னாதி பரம்பரை யின்கட்
      டாலய மக்கண மேவுத லாலும்.

     (இ-ள்.)    காலமனாதி - அனாதிகாலமாக, பரம்பரையின்கண்
தேவர்   -    தேவர்கள்   பாரம்பரிய   வரிசையாக,   ஞாலமோர்
மூன்றுடையானது    -    திரிலோக    நாதனாகிய    ஜினேந்திரப்
பிரதிமைகளின்,  மைமையின்மேல்  -   பூஜிப்பதன்மேல்,   எழும் -
உண்டாகிய,  காதல் - பக்தியில், விரும்பியும் - மிகுதியும் இச்சித்தும்,
ஆலயம் -  அந்த  நந்தீசுவரத்வீபத்திலிராநின்ற  அக்கிருத்திம ஜின
சைத்யாலயங்களில்,   அக்கணம்   -   அந்தந்தக்   காலந்தோறும்,
மேவுதலாலும் - அடைகின்ற எண்ணத்தாலும், எ-று. (230)

 1278. சோதம னாதி சுரேந்திரர் மைமைகட்
      கோதிய பெற்றியின் முற்றுமு ழைக்கலம்
      மாதர்க ளேந்திய வாச்சிய கோடணை
      யோத வெழுந்துடன் யாவரும் வந்தார்.

     (இ-ள்.) மைமைகட்டு - அந்த ஜினபூஜா காரியத்திற்கு, ஓதிய -
சொல்லப்பட்ட,   உழைக்கலம்  முற்றும்  -  யோக்கியமாகிய எல்லா
வஸ்துக்களையும் பெற்றி