596மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
  

யின் - பெருமையோடு, ஏந்திய - தரிக்கப்பட்டவர்களாகிய, மாதர்கள்
- தேவனிதைகளும்,  சோதமனாதி  - ஸௌதர்மேந்திரன் முதலாகிய,
சுரேந்திரர் யாவரும் - தேவேந்திரர்களெல்லாரும், வாச்சியகோடணை
- தேவ வாத்தியங்களின் சப்தங்கள், ஓத - மிகவும் சப்திக்க, உடன் -
உடனே, எழுந்து -  கிளம்பி,  வந்தார் - அந்த நந்தீசுவரத்வீபத்தில்
வந்தார்கள், எ-று. (231)

 1279. சங்கு முரன்றன தாரைகள் பேர்சொல
       வெங்கு முழங்கின பேரிய மவ்வொலி
       பொங்கிய வாத மடித்துழி மால்கட
       லங்கெழு வோசையை வென்றன வன்றே.

   (இ-ள்.)  சங்கு  -  சங்கு  வாத்யங்கள், முரன்றன - சப்தித்தன,
தாரைகள் - சிறு சின்னங்கள், பேர்சொல -  இரைச்சலிட, பேரியம் -
பேரிகைகளும், எங்கும் - எவ்விடங்களிலும்,  முழங்கின - சப்தித்தன,
அவ்வொலி - அந்தச் சப்தங்கள், பொங்கிய -  பெரிதாகிய, வாதம் -
காற்றானது, அடித்துழி - அடிக்கின்ற காலத்தில், மால் - பெரிதாகிய,
கடல் -  ஸமுத்திரத்தில்,  அங்கெழு  -  அப்பொழுது  உண்டாகிற,
ஓசையை - சப்தத்தை, வென்றன - ஜெயித்தன, எ-று. (232)

  1280. துகிற்கொடி வெண்குடை தொக்கு நிரைத்தன
        மகத்தவர் மங்கலம் பாடவ ரோசை
        புகத்திசை விம்ம லொலித்த மனத்தின்
        மிகைத்தெழு மானந்த ராகி யிருந்தார்.

     (இ-ள்.)  இஞ்சிகள் - அக்கோயிலின்   சுற்றுமதில்களானவை,
துகிற்கொடி   -  துவஜக்கொடிகளும்,  வெண்குடை  -  வெள்ளைக்
குடைகளும்,  தொக்கு  -  கூடி,  நிரைத்தன  - நெருங்கப்பெற்றன,
மகத்தவர்  -  ஜினேந்திரனுடைய,  மங்கலம்  பாடவர்  -    மங்கல
பாடகர்களுடைய, ஓசை - சப்தமானது, திசை - எத்திக்குகளிலும், புக
- அடையும்படியாக,  விம்ம  -  அதிகரிக்க,  ஒலித்த  - சப்தித்தது,
மனத்தின்  -  மனதில்,  மிகைத்தெழும்  -  மிகுதியாக  உண்டாகிய,
ஆனந்தமாகி   -     சந்தோஷமுடையவர்களாகி,      இருந்தார் -
இராநின்றார்கள், எ-று. (233)

 1281. பரந்த வரம்பையர் பாடலோ டாட
       னிரந்த வியாழ்குழல் கின்னர கீதந்
       துரங்கமு மாவொடு மானமு மேறி
       விரும்பிய வண்ண மணிந்து வியந்தார்.

    (இ-ள்.) அரம்பையார்  -   தேவரம்பையருடைய, பாடலோடு -
பாட்டுகளுடன்,  ஆடல்  -  நர்த்தனங்களும், பரந்த - வியாபித்தன,
யாழ் - வீணைகளும்,