(இ-ள்.)
எழுச்சி - இவ்விதமாக
எழுந்து வருகின்ற
காலத்தில், முழாவொலி - மத்தளங்களின்
சப்தமானது, எங்கும் -
எவ்விடங்களிலும், இயம்ப -
சப்திக்க, பண்ணவர்கோனை -
தேவர்கள் நாதனாகிய ஸ்வாமியை, பழிச்சி - ஸ்தோத்திரஞ் செய்து,
எழுந்தனர் புறப்பட்டார்கள், வழக்கினில் - பரம்பரை வழக்கத்தினால்,
உலகந்நடு - இந்த மத்திம லோகத்துள்ள நந்தீசுவரத்வீபத்தில்,
வந்து
- வந்து சேர்ந்து, மைமைத் தொழிற்கிறை -
பூஜைத் தொழிலுக்குத்
தலைவனாகிய, சோதமன் - ஸௌ தர்மேந்திரனுடைய, ஏவலினால் - ஆக்கினையினாலே, எ-று. (237)
1285. கத்திகை பங்குனி யாடிய காசறு
சுக்கில பக்கநல் லட்டமி தன்னில்
ஒத்தவோர் பாதியில் வந்துநந் தீச்சரம்
புக்கவர் மைமை தொடங்கின ரன்றே.
(இ-ள்.)
கத்திகை - கார்த்திகை மாதத்திலும், பங்குனி -
பங்குனிமாதத்திலும், ஆடிய - ஆடிமாதத்திலும், காசறு - குற்றமற்ற,
சுக்கிலபக்கம் - பூர்வபட்சத்தில்,
ஒத்த - பொருந்திய, நல்
அட்டமிதன்னில் - நல்ல அஷ்டமிதிதி முதல் ஓர் - ஒப்பற்றதாகிய,
பாதியில் - அந்த பக்ஷத்தில் உள்ள எட்டு நாளைக்கும்,
நந்தீச்சரம் -
நந்தீசுவரத்வீபத்தில் வந்து, புக்கவர் -
அடைந்து தங்கிறவர்களாகி,
மைமை - பூஜையை, தொடங்கினர் - செய்வதற்காரம்பித்தார்கள்,
எ-று. (238)
1286. அக்கண மிக்க வரம்பைய ராடுநர்
பக்க மெழுந்த வியாழ்குழல் பண்ணொலி
தொக்கு முரன்ற வலம்புரி துந்துபி
நக்கன வான முழக்கினை மாதோ. (இ-ள்.)
அக்கணம் - அப்பூஜாகாலத்தில்,
மிக்க -
மிகுந்த, அரம்பையர்
- தேவநர்த்தகிகள்,
ஆடுநர் -
நர்த்தனமாடுபவர்களானார்கள், யாழ் - வீணைகளுடையவும், குழல் -
புள்ளாங்குழல்களுடையவும், பண் - கீதங்களினுடையவும்,
ஒலி -
சப்தமானது, பக்கம் - எப்பக்கங்களிலும்,
எழுந்த - உண்டாயின,
வலம்புரி - வலம்புரிச்சங்குகளும், துந்துபி - மேளங்களும், தொக்கு -
கூடியொலித்து, வானமுழக்கினை - மேக கர்ஜனையை,
நக்கன -
சிரிப்பனவாய், முரன்ற - சப்தித்தன, எ-று. (239)
1287. சல்லரி தண்ணுமை பேரி முழாவொலி
யெல்லை தமக்கிலை யென்ன
வெழுந்தன
|