சமவசரணச்சருக்கம்599


Meru Mandirapuranam
  

      சொல்லினர் தம்மெதிர் சொல்லினர் தம்மொலி
      யொல்லெனு மாக்கட லோசையி னொன்றே.

    (இ-ள்.)     சல்லரி -   ஜல்லரி  வாத்தியமும்,  தண்ணுமை -
ஓர்கட்பறை முதலாகிய வாத்தியங்களும், பேரி - பேரிகைகளும், முழா
- மத்தளங்களும்,  (ஆகிய  இவற்றின்), ஒலி - சப்தங்கள், எல்லை -
எல்லையானது,  தமக்கிலை  -  தமக்கு  இல்லை,  என்ன  - என்று,
எழுந்தன -  வியாபித்தன,  சொல்லினர்தம்  -  வசனிப்பவர்களுக்கு,
எதிர் சொல்லினர்  தம் -  மறுமொழி  சொல்பவர்களுடைய,  ஒலி -
சப்தங்களும்,  ஒல்லெனும்  - ஒல்லென்றிரைகின்ற, மா - பெரிதாகிய,
கடலோசையின் - ஸமுத்திர இரைச்சலைப்போல, ஒன்று - ஒன்றாகும்,
எ-று. (240)

 1288. தும்புரு நாரதர் தொக்குடன் மிக்கவ
      ரெங்கு மியாழிசை யோடொலி தொட்டனர்
      தங்கிய கின்னரர் தம்மிது னங்களை
      தங்கிய கீதமோ டாயினர் தாமே.

     (இ-ள்.)    தும்புரு  நாரதர்  -   தும்புரு நாரதரென்கிற ஒரு
வகையான தேவரிஷியர்கள், யாழிசையோடு மிக்கவர் - வீணாகானஞ்
செய்வதோடு  மிகு  வல்லவர்களாய்,  எங்கும்  -  எவ்விடங்களிலும்,
உடன்  தொக்கு  -  உடனே  கும்பல்  கும்பலாகச்  சேர்ந்து,  ஒலி
தொட்டனர் - வீணாவாத்திய வொலியைச் செய்யத் தொடங்கினார்கள்,
தங்கிய  -  தங்குதல்  கொண்ட,  கின்னரர்தம்  மிதுனங்கள் தாம் -
கின்னரதேவதம்பதிகள்,  ஐ   தங்கிய  -  அழகு   சேர்ந்திராநின்ற,
கீதமோடாயினா - கீதங்கள் பாடுதலுடன் செறிந்தார்கள், எ-று. (241)

வேறு.

 1289. சக்க ரன்முதற் றேவர்க டாஞ்செய்த
      மிக்க செல்வத்தை யாவர் விளம்புவா
      ரக்கண முச்சகத் துள்ளவ ராலையந்
      தொக்க வேதொடங் கிச்சிறப் போடுமே.

     (இ-ள்.)   சக்கரன்முதல்  -    ஸௌதர்மேந்திரன்  முதலாக,
தேவர்கள் தாம்  -  தேவர்கள்,  செய்த  -   உண்டாக்கிய, மிக்க -
மிகுதியாகிய,   செல்வத்தை  -  ஐஸ்வரியத்தை,  யாவர்  - எவர்கள்,
விளம்புவார்  -  சொல்லுவார்கள்,   அக்கணம்  -   அக்காலத்தில்,
முச்சகத்திலுள்ளவராலையம்  -  மூன்று  லோகத்துள்ள அக்கிருத்திம
ஜினசைத்யாலயங்களில்,    தொக்க    -   சேர்ந்ததாகி,   சிறப்பு -
தேவர்களால் செய்யப்பட்ட பூஜையானது,  தொடங்கி  - ஆரம்பித்து,
ஓடும் - செல்லாநிற்கும், எ-று. (242)