வேறு.
1290. சக்கரன் சமர னீசன் வைரனாந் தேவ ராசர்
தொக்கவா னவரை நான்கு பாகமாய்த்
தொகுத்துக் கொண்டு
மிக்கவத் திக்கை மேவி விரகுளி
சிறப்ப யர்ந்த
பக்கத்தெண் ணாளுஞ் செய்வர்
பதினைநா ழிகையோர் பாலே.
(இ-ள்.)
சக்கரன் - ஸௌதர்மேந்திரனும், சமரன் - பவண
தேவகுலத்துச்சமரனென்னும் பெயருடைய அஸுரேந்திரனும், ஈசன் -
ஈசான கல்பத்திந்திரனும்,
வைரன் - வைரோசனனென்னும்
பெயருடையவனாகிய அஸுரகுலத்திந்திரனும்,
ஆம் - ஆகிய,
தேவராசர் - இந்த நாலு தேவராசர்களும், தொக்க - சேர்ந்திராநின்ற,
வானவரை - தேவர்களை, நான்கு பாகமாய்
- நாலு பங்காக,
தொகுத்துக்கொண்டு - பிரித்துக்
சேர்த்துக்கொண்டு, மிக்க
வத்திக்கைமேவி - மிகுந்த அந்த
நந்தீசுவர த்வீபத்தில் நாலு
மஹாதிக்குகளிலும் உள்ள ஆலயங்களில்
பொருந்தி, விரகுளி
சிறப்பயர்ந்த - கிரமமாகச் சிறப்புச் செய்த, பக்கத்தெண்ணாளும் -
பூர்வபட்சத்தஷ்டமி முதல் எட்டு நாளும், பதினை நாழிகையோர் பால்
- பதினைந்து நாழிகை வரையில் ஒரு பக்கத்தில், (அதாவது :
நாலு
பங்குக்காரர்களும் செய்ய, அறுபது நாழிகையாக
இப்படி எட்டு
நாளும் இடைவிடாமல்), செய்வர் - சிறப்புச் செய்வார்கள், எ-று. (243)
1291. அக்கணத் தகத்துப் பஞ்ச மந்திரத் தால யத்துட்
புக்குசா ரணரின் மிக்கா ரிறைவனைப் போற்றி சைப்பர்
திக்கெட்டி லிறைவன் பாதஞ் செறிந்துல காந்தி தேவர்
தக்கவச் சிறப்பை யெல்லாந் தாஞ்சிந்தித் திருப்பரன்றே.
(இ-ள்.)
அக்கணத்தகத்து -
அந்த நந்தீசுவர
பூஜாகாலமாகிய கார்த்திகை பங்குனி ஆடிமாஸ பூர்வபட்ச
அஷ்டமி
முதல் பௌர்ணமிவரையில், பஞ்சமந்தரத்து
- (ஜம்பூத்வீபமேரு
ஒன்றும், தாதகிஷண்டத்திலிரண்டும், புஷ்கராத்தத்தில்
இரண்டுமாகிய
இந்த) ஐந்து மஹாமேரு பர்வதங்களிலுள்ள,
ஆலயத்துள் -
அக்கிருத்திம ஜினசைத்யாலயங்களில், சாரணரின் மிக்கார் -
மிகுந்த
ஸம்மியக்ஞானதி குணமுடைய
சாரண பரமேஷ்டிகளாகிய
யதிவரர்கள், புக்கு - அடைந்து, இறைவனை -
ஜினேந்திரனை,
போற்றிசைப்பர் - ஸ்துதிசெய்வார்கள்,
திக்கெட்டில் -
பிரம்மலோகாந்தியத்தில் எட்டுத்திக்கிலு மிராநின்ற, உலகாந்தி
தேவர்
- லௌகாந்தி தேவர்கள், இறைவன் பாதம்
- ஜினேந்திரனுடைய
பாதங்களை, செறிந்து - மனதில்
சேர்ந்தவர்களாகி, தக்க
தகுதியாகிய, அச்சிறப்பையெல்லாம் - அந்த
நந்தீசுவர பூஜைகளை
யெல்லாம், சிந்தித்திருப்பர் - தியானித்துக் கொண்டிருப்பார்கள், எ-று.
தாம், அன்றே - அசைகள். (244)
|