1292. நானவிதி முதல்விதிக ளறிந்துமஞ்ச னாங்கத்
தானமவை யெய்திமஞ்ச னாங்கமவை வாங்கி
வானவர்கண் மணிக்குடத்து நந்தையெனும் வாவி
பானந்தனை முகந்துமுகம் பதுமமலர் சூட்டி.
(இ-ள்.)
நானவிதிமுதல் - ஜினேந்திரப்
பிரதிமைகளுக்குச்
செய்யும்படியான ஸ்நானாபிஷேக விதிமுதலாகிய,
விதிகள் -
வரிசைக்கிரமங்களை, அறிந்து - தெரிந்து, மஞ்சனாங்கத்தானமவை -
திருமஞ்சனங்கள் இருக்கும்படியான இடங்களை, எய்தி - அடைந்து,
மஞ்சனாங்கமவை - திருமஞ்சன அங்கமாகிய திரவியங்களை, வாங்கி
- கிரகித்துக்கொண்டு, வானவர்கள் - தேவர்கள், மணிக்குடத்து -
ரத்னங்களாலாகிய கடங்களில், நந்தையெனும்
- நந்தையென்கிற,
வாலிபானந்தனை - தடாகத்தின் ஜலத்தை, முகந்து -
விதிப்பிரகாரம்
மொண்டு, முகம் - அக்குடத்தின் முகத்தில், பதுமமலர் -
தாமரைப்
புஷ்பத்தை, சூட்டி - அணிந்து, எ-று.
இதுவும்
அடுத்த செய்யுளும் குளகம். (245)
1293. அஞ்சலியி னோடிறைவ னாலயத்தை வலமாய்
வந்தவர்க ணின்றிடத்தின் மணிக்கதவந் திறப்ப
வந்தமினல் லறிவிறைவன் றிருவுருவங் காணார்
வந்தெழுந்த வானந்தத்தின் மயங்கிமிகத் துதித்தார்.
(இ-ள்.)
அஞ்சலியினோடு - வணக்கத்துடன், இறைவன் -
ஜினேந்திரனுடைய, ஆலயத்தை -
கோயிலை, வலமாய் -
பிரதக்ஷணமாக, வந்து - மூன்று
சுற்றுவந்து, அவர்கள் -
அத்தேவர்கள், நின்றிடத்தில் - இராநின்ற விடத்தில், மணிக்கதவம் -
அழகிய கதவுகள், திறப்ப - திறக்கப்படுதலால், (அப்பொழுது
உள்ளேயிராநின்ற), அந்தமில் - முடிவில்லாத, நல் - நன்மையாகிய,
அறிவு - கேவல ஞானத்தையுடைய, இறைவன்
- ஜினேந்திரப்
பிரதிமையின், திரு - அழகிய, உருவம்
- ரூபத்தை, காணா -
பார்த்து, வந்து - மனத்தில் தோன்றி,
எழுந்த - உண்டாகிய,
ஆனந்தத்தின் - பக்தியினால், மிக
மயங்கி - மிகுதியாகக்கூடி,
துதித்தார் - தோத்திரம் செய்தார்கள், எ-று. (246)
1294. அனந்தவறி வாலனந்த வீரியனு மானாய்
அனந்ததெரி சியனந்த வின்பமுடை யோயை
மனஞ்செயலின் வணங்கினவர் பணிந்துலக மேத்த
நினைந்தபடி யெய்திவினை நீத்துயர்வ ரன்றே.
|