602மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
  

   (இ-ள்.)     (அவ்வாறு    துதித்தவர்கள்),   அனந்தவறிவால் -
அனந்த  ஞானத்தினாலே,  அனந்த  வீரியனுமானாய்  -    அனந்த
வீரியத்தை யுடையவனுமானாய், அனந்ததெரிசி -  அனந்ததர்சனத்தை
யுடையவனும், அனந்தவின்பமுடையோயை - அனந்தஸௌக்கியத்தை
யுடையவனுமாகிய உன்னை,  மனம்செயலின் -  மனோவாக்காயங்கள்
பொருந்த,    பணிந்து    -      நமஸ்கரித்து,    வணங்கினவர் -
வணங்குகின்றவர்கள்,   நினைந்தபடி  - நினைத்த பிரகாரம், எய்தி -
அடைந்து,    வினைநீத்து  -  கர்மங்களைக்  கெடுத்து,   உலகம் -
இவ்வுலகத்துள்ள  பவ்வியர்கள்,  ஏத்த  -  ஸ்துதிக்க,    உயர்வர் -
மேலானபதவியைப் பெறுவார்கள், எ-று. இதுவும் அடுத்த  செய்யுளும்
குளகம். (247)

  1295. என்றுநின்று துதித்திறைவ னாலயத்தி னுள்ளா
       லன்றுசென்று புக்கமர ராசரவர் தாங்கள்
       வென்றவர்த மிறைவன்றிரு வுருவதனுக் கேற்ப
       நின்றவர்கள் செய்தசிறப் பெவர்க்குநினைப் பரிதே.

    (இ-ள்.)  என்று  நின்று  துதித்து  -  என்று  சொல்லி  நின்று
துதிசெய்து,      அமரர்   -   தேவர்களும், அரசரவர்  தாங்கள் -
தேவேந்திரர்களும், இறைவன் - சர்வஜ்ஞனுடைய, ஆலயத்தினுள்ளால்
- ஆலயத்துள்,  அன்று  -  அப்பொழுது,  சென்றுபுக்கு -   போய்
உள்ளேயடைந்து,    வென்றவர்தம்   -    ஸகல   கர்மங்களையும்
ஜெயித்தவராகிய,  இறைவன்  -  ஜினேந்திரனுடைய, திரு - அழகிய,
உருவதனுக்கு -  ரூபமாகிய  பிரதிமைகளுக்கு,  ஏற்ப - இசையும்படி,
நின்று - நிலைபெற்று, அவர்கள் - அத்தேவர்கள், செய்த - இயற்றிய,
சிறப்பு -  பூஜையானது,  எவர்க்கும் -   யாவர்களுக்கும், நினைப்பு -
எண்ணுவதற்கு, அரிது - அருமையாகும், எ-று. (248)

வேறு.

 1296. தோள்க ளாயிரத் தழுத்தினர்
           மணிக்குடம் சோதமன் முதலானோர்
      வீழும் மேருவின் னருவியின்
           வீழ்த்தனர் வென்றவர் தம்மேனி
      யூழி யூழிதோ றாயதீ
           வினையவை தீர்ந்தமூ வுலகத்தோர்
      தாழு மப்பெயர்த் தாண்டக
           மாயிர முகத்துடன் படித்தாரே.

     (இ-ள்.)   சோதமன்    முதலானோர்  -  ஸௌதர்மேந்திரன்
முதலாகிய  தேவர்கள்,  தோள்களாயிரத்து -   ஆயிரம்  புயங்களை
நிருமித்துக்கொண்டு அவற்றால்,