மணிக்குடம் - ரத்தினத்தினாலாகிய பூர்ண கடங்களை, அழுத்தினர் -
தரித்தவர்களாய், வென்றவர்தம்மேனி
- கருமங்களை ஜெயித்த
ஜினேந்திரப் பிரதிமைகளின் மேல்,
மேருவின் - மஹம்மேரு
பர்வதத்தினின்றும், வீழும் - சொரிகின்ற,
அருவியின் -
அருவிஜலம்போல, வீழ்த்தனர் - சொரிந்தார்கள், ஆயிரமுகத்து -
(பிறகு) ஆயிரம் முகங்களை நிருமித்துக்கொண்டு
அவற்றால்,
மூவுலகத்தோர் தாழும் -
மூன்று லோகத்தார்களாலும்
வணங்கும்படியாகிய, அப்பெயர் - அந்த
ஜினேந்திர குண
ஹைஸ்ராஷ்ட நாமங்களாகிய, தாண்டகம் - தண்டகஸ்துதியை, உடன்
- அபிஷேகவிதி முடிந்தவுடன், படித்தார் - சொல்லித் துதித்தார்கள்,
ஊழிஊழி தோறாய - ஒவ்வொரு ஊழ்க்காலத்திலு
முண்டாகிய,
தீவினையவை - கெட்டவினைகளெல்லாம், தீர்ந்த - நீங்கின, எ-று. (249)
1297. கண்க ளாயிர முடையவச்
சக்கரன் காதியைக் கடிந்தோர்தம்
பண்பெ லாமுட னிருந்தவப்
படிமத்தைப் பலமுறை பார்த்தாரா
வண்கை யாற்றொழு திறைவன்றன்
சரணத்தை வாழ்த்தொடு மருச்சித்தான்
பெண்க ளிற்பிறப் பில்லவிந்
திராணியிப் பெருஞ்சிறப் புடன்செய்தாள்.
(இ-ள்.)
கண்களாயிரமுடைய - ஆயிரம் கண்களையுடைய,
அச்சக்கரன் - அந்தத்
தேவேந்திரனானவன், காதியை
-
காதிகருமங்களை, கடிந்தோர்தம்
- ஜெயித்தவராகிய
ஜினேந்திரருடைய, பண்பெலாம் - குணமெல்லாம், உடனிருந்த - ஒரு
தன்மையைப்போல் சேர்ந்திராநின்ற,
அப்படிமத்தை - அந்தப்
பிரதிமாரூபங்களை, பலமுறை - பலதடவையும், பார்த்து - நோக்கி,
ஆரா - ஆர்ந்து, (அதாவது : பொருந்தி), இறைவன்தன் சரணத்தை -
ஜிநப்பிரதிமைகளின் பாதத்தை,
வண்கையால் தொழுது -
ஈகைபொருந்திய கையால் வணங்கி, வாழ்த்தொடும் - ஸ்துதியுடன்,
அருச்சித்தான் - அர்ச்சனையும்
செய்தான், பெண்களில் -
தேவஸ்த்ரீகளில், பிறப்பில்ல - இனி அதிகப்
பிறப்பில்லாமல் அடுத்த
ஒரு பவத்தில் கர்மக்ஷயம்செய்து மோட்சமடையும்
பக்குவமுள்ள,
இந்திராணி - இந்திராணியானவள், இப்பெருஞ்சிறப்பு -
இந்த
நந்தீசுவர பூஜையை, உடன் - தேவேந்திரனுடன்கூட,
செய்தாள் -
செய்து முடித்தாள், எ-று. (250)
1298. கந்த முங்கடி மாலையுஞ் சுண்ணமுங் காரகி லிடுதூப
நந்தை யின்னல வாரியுந் தீபமு நலபல சருவாலு
மந்த மில்லநல் லுவகையின்
னடம்பல தொடங்கிநின் றருச்சித்தார்
சந்தி ராதிகீழ் முத்தேவ
ருமிந்திரர் சோதமன் முதலானோர்.
|