கீழ்முத்தேவரும் - (பவண,
வியந்தர, ஜோதிஷ்கரென்கிற) கீழ்
முத்தேவர்களும், சந்திராதி - சந்திராதித்யர் முதலாகிய,இந்திரர் -
கீழ்முத்தேவேந்திரர்களும்,
சோதமன்
முதலானோர் -
ஸௌதர்மேந்திரன் முதலாகிய கல்பாமர இந்திரர்களும், அந்தமில்ல -
அளவில்லாததாகிய, நல்லுவகையின்
- நன்மையாகிய
ஸந்தோஷத்தினால், நடம்பலதொடங்கிநின்று - பலவிதமாக
ஆனந்த
நர்த்தனங்களைச் செய்து நின்று, கந்தமும் - சந்தனக்குழம்பு
முதலிய
ஸுகந்த வஸ்துக்களாலும், கடி - வாசனை
தங்கிய, மாலையும் -
பூமாலைகளாலும், சுண்ணமும் - வாசனைத்
திரவிய கதம்பத்
தூள்களாலும், கார் - கருமை பொருந்திய,
அகிலிடும் - அகில்
கட்டையின் தூள் முதலியவற்றால்
போடப்பட்ட, தூபம் -
தூபங்களாலும், நந்தையின் - நந்தையென்கிற
தடாகத்திலுண்டான,
நல் - நன்மையான, வாரியும் - ஜலத்தினாலும், தீபமும் - தீபத்தாலும்,
நல - நன்மையாகிய, பல - அநேக விதங்களாகிய,
சருவாலும் -
அப்பவர்க்கங்களாதியாலும், அருச்சித்தார் - அர்ச்சனை செய்தார்கள்,
எ-று. (251)
1299. மற்ற விந்திரர் தம்மொடும்
படிந்திரர் மைமைகண் மும்மைக்கண்
ணுற்று நற்சிறப் புழைக்கலந்
தாங்கினர் தேவியர் தம்மோடும்
பெற்றி யாற்பிறப் பறுக்குநற்
சிறப்பினைச் செய்துசக் கரன்பினைக்
குற்ற மில்லநல் லறிவுடை
யிறைவன்றன் குணத்துதி சொலலுற்றான்.
(இ-ள்.)
மற்ற - மீந்த, இந்திரர்
தம்மொடும் -
இந்திரர்களோடு, படிந்திரர் - பிரதீந்திரர்களும்,
மைமைகண் - பூஜா
காரியத்தில், மும்மைக்கண் - மனவசன
காயங்களென்னும்
மூன்றினாலும், உற்று - பொருந்தி, நல் - நன்மையாகிய,
சிறப்பு.
அந்த பூஜைக்கு யோக்கியமாகிய, உழைக்கலம்
- பொருள்களை,
தேவியர் தம்மோடும் - தங்கடங்கள் தேவி மார்களுடன், தாங்கினர் -
தரித்தார்கள், சக்கரன் - ஸௌதர் மேந்திரனானவன், பெற்றியால் -
பெருமையினாலே, பிறப்பறுக்கும்
- ஸம்ஸாரத்தைக்
கெடுக்கும்படியான, நல் - நன்மையாகிய, சிறப்பினை -
இந்த நந்தீசுர
பூஜையை, செய்து - செய்து, பின்னை
- பிறகு, குற்றமில்ல -
தோஷநிவாரணமாகிய, நல் - நன்மையாகிய,
அறிவுடை - கேவல
ஞானத்தையுடைய, இறைவன் தன் - ஜினேந்திரனுடைய, குணத்துதி -
குணத்தின் ஸ்துதிகளை, சொல்லுற்றான் - சொல்லத் தொடங்கினான்,
எ-று. (252)
|