சமவசரணச்சருக்கம்605


  

 1300. அருக னீநல்ல பூசைக் கருகனாய்ப்
      பெரியை யாயினை பெண்ணசை யின்மையா
      லொருவ னாயினை யொப்பவ ரின்மையாற்
      றுருவ மாயினை தோற்றம தின்மையால்.

    (இ-ள்.)      நல்ல    -     நன்மையாகிய,     பூசைக்கு  -
பவ்வியர்களினால்  செய்கின்ற   பூஜைக்கு,  நீ  -  நீ, அருகனாய் -
உரியவனாகி,      (அதனால்),       அருகன்     -     அருகன்
என்கிற      பெயருடையவனானாய்,     பெண்ணசையின்மையால் -
ஸ்த்ரீவாஞ்சையில்லாததினால்,  பெரியையாயினை - பெரியோனானாய்,
ஒப்பவரின்மையால்           உனக்கொப்பானவர்களில்லாமையால்,
ஒருவனாயினை    -   உபமாதீதனாகினாய், தோற்றமதின்மையால் -
பிறப்பில்லாததனால்,     துருவமாயினை      -        நிச்சயமான
நித்தியஸ்வரூபியானாய், எ-று. (253)

 1301. எரியும் போல்வைநீ யெண்வினைக் காளித
     முருகச் சுட்டுயிர் தூப்பத்தைச் செய்தலால்
     தருவு நீழவும் போல்வைநீ சார்ந்தவர்
     பெரிய துன்பப் பிறப்பினை நீத்தலால்.

     (இ-ள்.)    நீயறியா -   நீ  அறியாத,   பொருள் - திரவியம்
(அல்லது) வஸ்துக்கள்,  இன்மையால்  - இல்லாததினால், அறிவன் -
ஸர்வஜ்ஞனாகினாய், முற்றவுணர்ச்சியால் -  ஸகல  பொருள்களையும்
ஏகசமயத்தில்       அறிவதால்,      முறையு     நீ     யிலை -
கிரமகரண          வியவதானமென்பதை   நீயில்லாதவனாயினாய்,
காய்வதொன்றின்மையால் -   கோபத்தன்மை   சிறிதுமில்லாததினால்,
கறுவு நீ யிலை - துவேஷமென்பதை

 1302. அறிவ னீயறி யாப்பொரு ளின்மையால்
      முறையு நீயிலை முற்ற வுணர்ச்சியாற்
      கறுவு நீயிலை காய்வதொன் றின்மையால்
      இறைவ னீயுல கியாவு மிறைஞ்சலால்.

     (இ-ள்.) நீயறியா - நீ அறியாத, பொருள் - திரவியம்
(அல்லது) வஸ்துக்கள், இன்மையால் - இல்லாததினால், அறிவன் -
ஸர்வஜ்ஞனாகினாய், முற்றவுணர்ச்சியால் - ஸகல பொருள்களையும்
ஏகசமயத்தில் அறிவதால், முறையு நீ யிலை - கிரமகரண
வியவதானமென்பதை                      நீ               யில்லாதவனாயினாய்,
காய்வதொன்றின்மையால் - கோபத்தன்மை சிறிதுமில்லாததினால்,
கறுவு நீ யிலை - துவேஷமென்பதை