606மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
  

நீ யில்லாதவனாயினாய்,  உலகுயாவும்  -  உலகத்துள்ள   பவ்வியப்
பிராணிகளெல்லாம், இறைஞ்சலால் - உனை   வணங்குகின்றபடியால்,
இறைவனீ - திரிலோகத்துக்கும் நாதன் நீயேயாகின்றாய், எ-று. (255)

  1303. முழுது நீமுழு துக்கு மிறைவனீ
      முழுது தன்வடி வின்முழு தாகிநீ
      முழுதுங் கண்டுணர்ந் தாயின்ப முற்றுநீ
     முழுதும் விரித்து நான்முக னாகிநீ.

    (இ-ள்.)      முழுதும்நீ    -   லோகாலோக    ஸமஸ்தமும்
காண்கின்ற   அனந்த  தரிசனத்தால்  நிஜருசிலக்ஷண   முழுதையும்
அடைந்தவனீயே,  முழுதுக்கும்  -  லோக முழுதுக்கும், இறைவனீ -
நாதனானவனும்  நீயே,    முழுது  தன்  வடிவின்  -  உனது  முழு
ரூபத்தினால், முழுதாகி - ஸர்வவியாபியாகி,  (அனந்த ஞானத்தினால்)
நீமுழுதுங்   கண்டுணர்ந்தாய்  -  ஜீவாதி  சகல பதார்த்தங்களையும்
பிரத்தியக்ஷமாய்ப் பார்த்து  அறிந்தாய்  நீ, இன்பமுற்றுநீ - ஸம்பூர்ண
ஸௌக்கியமான  அனந்த  ஸுகமுள்ளவனும்  நீ, முழுதும் விரித்து -
ஜீவாதி சகல  பதார்த்தங்களையெல்லாம் திவ்யத்வனியால் விசாலமாக
விரித்துச் சதுர்வேதங்களாகும்படி  சொல்லியருளி,  நான்முகனாகிநீ -
சதுர்முகத்தை யுடையவனும் நீயே, எ-று. (256)

 1304. உண்மை தானின்மை யுண்மை யின்மையாந்
    திண்ணிய தன்னோ டவாச்சியஞ் செப்பிடிற்
     பண்ணு பங்கங்க ளேழ்பொருட் கில்லையே
    லுண்மை தான்பொருட் கில்லையென் றோதினாய்.

     (இ-ள்.)    உண்மைதான்  -    ஸ்யாதஸ்தியும்,   இன்மை -
ஸ்யாநாஸ்தியும்,  உண்மையின்மை -  ஸ்யாதஸ்திநாஸ்தியும்,  ஆம் -
ஆகிய,   திண்ணிய   -  சேர்ந்திரா  நின்ற,  தன்னோடு  -  இந்த
மூன்றோடு,    அவாச்சியம்  -  ஸ்யாதவக்  தவ்யமும், (எனநாலாக),
செப்பிடில் -  சொல்லுமிடத்தில்,  பண்ணு - சேர்க்கின்ற (அதாவது :
முன்  பண்பாகிய  மூன்றுகளுடன்  நாலாவதாகிய அவக்தவ்யத்தைத்
தனித்தனியாகச்     சேர்க்க,      ஸ்யாதஸ்தி       அவக்தவ்யம்,
ஸ்யாநாஸ்தியவக்தவ்வியம், ஸ்யாதஸ்தி  நாஸ்தியவக்தவ்வியமுமென்று
கணக்கிடுகின்ற), பங்கங்களேழ் -  இந்த  ஸப்தபங்கி  நியாயமானது,
பொருட்கு - ஜீவாதி  பொருள்களுக்கு , இல்லையேல்  -  இல்லாமல்
போகுமானால்,    பொருட்டு    -    ஜீவாதி   பதார்த்தங்களுக்கு,
உண்மைதானில்லையென்று  -  நிச்சயமில்லை   யென்று, ஓதினாய் -
சொல்லினாய், எ-று. (257)

 1305. சுற்ற நீயெவர்க் குந்துன்ப நீக்கலாற்
     பற்று நீயிலை பற்றவை தீர்த்தலான