முற்று நீயுணர்ந் தாய்மூ
வுலகத்தின்
பெற்ற தன்னைநீ யாவர்க்கும் பேசலால்.
(இ-ள்.)
எவர்க்கும் - உனையடைந்த
யாவர்களுக்கும்,
துன்பம் - துக்கங்களை, நீக்கலால் - நீங்கச்
செய்வதால், சுற்ற நீ
ஸகல பவ்வியபந்துவும் நீயே, பற்றவை
- மோஹத்தினாலாகின்ற
ராகத்வேஷாதி பற்றுக்களை,
தீர்த்தலால் -
நீக்குகின்ற
பிரகாரத்தினால், பற்று நீ யிலை
- நீராகாதி பற்றின்றி
வீதராகனாகின்றாய், மூவுலகத்தின் பெற்றி
தன்னை - மூன்று
லோகத்தினுடைய ஸ்வரூபங்களை , யாவர்க்கும் -
கணதராதி ஸகல
பவ்விய ஜீவர்களுக்கும், நீ பேசலால் - நீ உபதேசஞ்செய்வதினால்,
முற்றும் - கைலத்தையும், உணர்ந்தாய் நீ - அறிந்தவனும் நீயே, எ-று. (258)
1306. அருவ னீயக திக்க ணிருத்தலால்
உருவ னீயுடம் போடுசென் னாளெலாம்
மருவி வானவர் வாழ்த்தியிவ் வாற்றினாற்
பொருவி லாப்புண்ணி
யத்தொடும் போயினார்.
(இ-ள்.)
அகதிக்கண் - இனியாதொன்றிலு
மடைந்து
பிறத்தலில்லாத மோட்டசத்தில், இருத்தலால் -
இருக்கின்றபடியால்,
அருவன்நீ - அரூபியானவனும் நீயே, உடம்போடு செல்நாளெலாம் -
மோட்சமடைவதன் முன் சரீரத்தோடு கூடிச்சென்ற காலத்திலெல்லாம்,
உருவன்நீ - ரூபத்தையுடைத்தானவனும் நீயே,
(என்று),
இவ்வாற்றினால் - இந்தப்
பிரகாரத்தினால், வானவர் -
சதுர்ணிகாயாமரர்களும், மருவி
- நந்தீசுவரத்வீபத்தில்
அக்கிருத்திமசைத்யாலயப் பிரதிமைகளின் எதிரிலடைந்து,
வாழ்த்தி -
ஸ்தோத்திரங்களைச் செய்து,
பொருவிலா - உபமையில்லாத,
புண்ணியத்தொடும் - புண்ணியத்தோடும் கூடினவர்களாகி, போயினார்
- தங்கள் தங்களிடமடைந்தார்கள், எ-று. (259) வேறு.
1307. இமையவர் போலவிச் சிறப்பைச் செய்தவ
ரிமையவ ருலகத்தை யெய்தி யிங்குவந்
திமையவர் செயுஞ்சிறப் பைந்து மெய்திப்போ
யிமையவர் தொழச்சித்தி யகத்தி ருப்பரே.
(இ-ள்.) இமையவர்போல - தேவர்களைப்போல, இச்சிறப்பை - இந்த
நந்தீசுவர பூஜையை, செய்தவர் - செய்த
அருகத் பக்திபாவனா
பலமுள்ள பவித்திர மனுஷ்யர்கள்,
இமையவருலகத்தை யெய்தி -
அடுத்த பிறப்பில் தேவருலகடைந்து
தேவர்களாகிப் பிறந்து
உத்கிருஷ்ட சுபோபயோகதத் பரர்களாகிப் பிறகு,
|