சமவசரணச்சருக்கம்609


Meru Mandirapuranam
  

   (இ-ள்.)  துகணிலமீது    -     சித்ரா     பூமிக்கு    மேலே,
பத்திலாதவெண்ணூறு   நற்புகைமிசை  -  எழுநூற்று   தொண்ணூறு
யோஜனைக்கு மேல், நூற்றொரு  பத்து  வான்புகை  -  நூற்றுபத்து
யோஜனை உயர பரியந்தம், இகழ்விலா - இகழ்ச்சியில்லாத, சோதிடர்
- ஜோதிஷ்கதேவர்கள்,   ஒரு   கயற்றெல்லை   -    மத்திமலோக
விஸ்தீர்ணமாகிய  ஒரு  கயிறுப்  பிரமாணத்திலும்,   அகணிலத்து -
இரண்டரைத்  வீபம்   இரண்டு   ஸமுத்திரங்களிலும்,  இயங்குவர் -
கமனத்தையுடையவர்களாயிரா நின்றார்கள்,  புறத்து - மானுஷோத்தர
பர்வதத்திற்குப்   புறம்பிலே,   நிற்பர்   -     ஸ்திரமாக    நிலை
பெற்றிருப்பார்கள், எ-று. (263)

 1311. இரவிபத் தின்மிசை யெண்ப தின்மிசை
     யரவிந்தப் பகைவனா மீன்க ணான்மிசை
     யுரைசெய்த புதற்குயர் நான்கு மூன்றின்மேல்
     விரகினால் வெள்ளிவி யாழஞ்செவ் வாய்சனி.

    (இ-ள்.)  பத்தின்மிசை    -   முன்   சொன்ன   எழுநூற்றுத்
தொண்ணூறு   யோஜனைக்கு   மேல்   பத்து    யோஜனையுயர்ந்த
யெண்ணூறு யோஜனையில், இரலி -  ஸூர்யவிமானமும்,  எண்பதின்
மிசை - எண்ணூற்றெண்பது  யோஜனையில்,  அரவிந்தப் பகைவன் -
சந்திரவிமானமும்,    ஆம்    -    ஆகும்,    நான்     மிசை -
எண்ணூற்றெண்பத்து  நாலு  யோஜனையில், மீன்கள் - இருபத்தேழு
நட்சத்திரங்களும்,  உரை  செய்த  -  சொல்லப்பட்டன,   புதற்கு -
புதவிமானத்திற்கு,  உயர்  -  உன்னதமானது,  நான்கு - அதன்மேல்
நான்காகிய  எண்ணூற்றெண்பத்தெட்டு  யோஜனையாகும்,   மூன்றின்
மேல்  -   இதற்கு   மேல்  மூன்று  யோஜனை  உயர்ந்தவிடத்தில்,
விரகினால்   -    கிரமத்தினால்,    வெள்ளி   -    (எண்ணூற்றுத்
தொண்ணூற்றொரு  யோஜனையில்)  சுக்கிரவிமானமும்,   வியாழம் -
(எண்ணூற்றுத்   தொண்ணூற்று  நாலு  யோஜனையில்)   பிரகஸ்பதி
விமானமும்,  செவ்வாய்   -   (எண்ணூற்றுத்     தொண்ணூற்றேழு
யோஜனையில்)   அங்காரக    விமானமும்,  சனி  -  (தொளாயிரம்
யோஜனையில்) சனி விமானமும், (ஆகும்), எ-று. (264)

 1312. கீழவாந் தாரகை கேட்கின் மேலுமா
      மேழுவான் சிலையுயர்ந் தேக பல்லமாம்
      வாழுநாள் சோதிடர்க் கன்றி மூவரும்
      கீழவா யுகமீரா யிரங்க ளஞ்சரே.

     (இ-ள்.)   கேட்கின்    -     கேட்குமிடத்தில்,   தாரகை -
தாராகணங்கள், கீழவாம் -   சந்திராதித்யர்க்கு    கீழாயிருப்பனவும்,
மேலுமாம் - மேலாயிருப்பனவும் ஆகும்,  ஏழுவான் சிலையுயர்ந்த -
ஏழு    வில்லுன்னத்தையடைந்த,    சோதிடர்க்கு  -    ஜோதிஷ்க
தேவர்களுக்கு, வாழு நாள் - ஆயுஷ்ய நாள், ஏகபல்லமாம்  -  ஒரு
பல்லமாகும், அன்றி - அதுவல்லாமல், மூவரும் - (பவண, வியந்தர,