1315. சொல்லிய படலந் தோறு மொரொவொன்று
சுருங்கிச் சென்று
நல்லிசை யணுதி சைக்கட் டிசைதொறு மொரொவொன் றாகும்
வில்லுமிழ்ந் திலங்கும செம்பொன் விமானத்தின் கணனை வேண்டிற்
சொல்லுதும் கேட்கச் சோத மீசானத் தொடக்க
மாக.
(இ-ள்.) சொல்லிய
- ஸௌதர்ம கல்ப்பத்தில் திக்குகளில்
அறுபத்திரண்டாகக் சொல்லப்பட்ட பேஸ்ரீணி
பந்தங்களானவை,
படலந்தோறு - மேல் மேல் படலங்கள் தோறும், ஒரோவொன்று
சுருங்கிச் சென்று - திக்குகளில் ஒவ்வொரு பேஸ்ரீணிபந்த விமானங்
குறைவாகிச் சென்று, நல் - நன்மையாகிய, இசை - புகழ்ச்சியையுடைய,
அணுதிசைக்கண் . நவாணுதிசையில், திசைதொறும் -
திக்குகள்
தோறும், ஒரொவொன்றாகும் - ஒவ்வொரு பேஸ்ரீணிபந்த விமானமாகும்,
வில் - கிரணங்களை, உமிழ்ந்து -
சொரிந்து, இலங்கும் -
விளங்குகின்ற, செம்பொன் - சிவந்த பொன்னாலாகிய, விமானத்தின் -
(இந்திரகம், பேஸ்ரீணிபந்தம், புஷ்பபிரகீர்ணமுமாகிய)
தேவ
விமானங்களினுடைய, கணனை - ஸங்கியைகளை,
வேண்டில் -
சொல்லவேண்டுமானால், சோதமீசானத் தொடக்கமாக - ஸௌதர்ம
ஈசானகல்ப்ப முதல் வரிசையாக, சொல்லுதும் - சொல்லுகின்றோம்,
கேட்க - கேட்கக் கடவீராக, எ-று.
(268)
1316. இலக்கமெண் ணான்கு மேழு நான்குமுந் நான்கு மெட்டு
மிலக்கநான் கிரண்டிற் காகு மேலிரண் டிரண்டிற்
கிவ்வா
றிலக்கத்தின் பாதி யெண்ணஞ் சாயிர மாறு
மாகி
விலக்கிலா விமான நான்கு நூறுமுந் நூறு மாமே.
(இ-ள்.) விலக்கிலா
- நீக்குதலில்லாத, விமானம் - தேவ
விமானங்கள், இலக்கமெண்ணான்கு - (ஸௌதர்ம
கல்ப்பத்தில்)
முப்பத்திரண்டு லக்ஷம் விமானங்களும், ஏழுநான்கு
- (ஈசான
கல்பத்தில்) இருபத்தெட்டு லக்ஷம் விமானங்களும்,
முந்நான்கு -
(ஸநத்குமார கல்பத்தில்) பன்னிரண்டு லக்ஷம் விமானங்களும், எட்டு -
(மாஹேந்திர கல்பத்தில்) எட்டு லக்ஷம் விமானங்களும், இரண்டிற்கு -
(பிரம்மபிரம்மோத்தர) மென்னும் இரண்டு கல்பங்களுக்கு,
இலக்க
நான்கு - நாலு லக்ஷம் விமானங்களும், ஆம் - ஆகும், மேல்
-
அதற்கு மேல், இரண்டிரண்டிற்கு - இரண்டிரண்டு கல்ப்பங்களுக்கு,
இவ்வாறு - இந்தப் பிரகாரம், இலக்கத்தின் பாதி - (லாந்தவகாபிஷ்ட
கல்பங்களில்) ஐம்பதினாயிரம் விமானங்களும், எண்ணஞ்சாயிரம்
-
(சுக்ர, மஹா சுக்ர கல்பங்களில்) நாற்பதினாயிரம் விமானங்களும்,
ஆறுமாகி - (சதார, ஸஹஸ்ரார கல்ப்பங்களில்) ஆறாயிரமுமாகி,
நான்கு நூறு - (ஆனத, பிராணத கல்ப்பங்களில்) நானூறும், முந்நூறும்
- (ஆரண, அச்சுத கல்பங்களில்) முந்நூறு விமானமும்,
ஆம் -
ஆகும், எ-று.
(269) |