(இ-ள்.)
மதியினும் - மதிஜ்ஞானத்திலும்,
கருத்து -
அர்த்தாவக்கிரகமென்றும், கண்கூடு - வியஞ்சனாவக்கிரகமென்றும்,
இரண்டுமாம் - இரண்டுவிதங்களுமாகும், விதியது - இந்த விதியின்,
விசேடம் - விசேஷத்தினால், கண்கூடு - கண்கூடாக, (இவை) பத்தாம்
- பத்துவிதமாகும், (அதாவது : ஸ்பரிச ரஸ கிராண சக்ஷு பேஸ்ரீத்திரம்
மனம் என்னும் இந்த ஆறுக்கும் தனித்தனியாக
ஏற்பட்ட
அருத்தவாக்கிரகம் ஆறோடு சக்ஷுவுக்கும்
மனஸுக்கும்
வியஞ்சனாவக்கிரகமில்லை ஆகையால் அவை நீங்க மற்றவைகட்கு
ஏற்பட்ட வியஞ்சனாவக்கிரகம் நாலும்சேர
அவக்கிரகபேதம்
பத்துவிதமாம். (இனி அர்த்தாவக்கிரகத்துக்கு மேல்),
விசாரணை -
ஈகையென்றும், நீக்கம் -
ஆவாயமென்றும், தேற்றம் -
தாரணையென்றும், ஆகும் - ஸ்பரிசனாதி ஆறு இந்திரியங்கட்கும்,
தனித்தனி ஆகும், (ஆகவே இவை பதினெட்டாகும்; இவற்றோடு
முன்சொன்ன அவக்கிரகங்களையும் கூட்ட இருபத்தெட்டாகும்;
இவைகளை பகு, பகுவிதம், ஏகம், ஏகவிதம், க்ஷிப்பிரம், அக்ஷிப்ரம்,
நிஸ்ரதம், அனிஸ்ரதம், உக்தம், அனுக்தம்,
த்ருவம், அத்ருவம்,
என்னும் பன்னிரண்டில் கணிக்க மதிஜ்ஞானம் முந்நூற்று முப்பத்தாறு
பேதமாகும்.) மற்று - பின்பு, இவை - இந்த ஞானவகைகள், மதி -
மதியென்றும், சுருதி - ஸ்ம்ருதியென்றும், சன்னா - ஸஜ்ஞையென்றும்,
சிந்தை - சிந்தையென்றும், (ஆபினிபோதியென்றும்,
பரியாயப்
பெயர்களுடையதாகி), பரோக்கமாகும் - பரோக்ஷஞானமே யாகும்,
அதன்முன்பு - அந்த மதிஜ்ஞானம் பூர்வகமாக,
செல்லும் -
உண்டாகிச் செல்லும், சுதமதியும் -
சுருதஜ்ஞானமும், நல் -
நன்மையாகிய, பரோக்கமாம் - பரோக்ஷ ஞானமாகும், எ-று.
இந்த மதிஜ்ஞான
பேதங்களை, தத்துவார்த்த ஸூத்ரம்
பிரதமாத்தியாயத்தில் ஒன்பதாவது ஸூத்ரம்முதலாக
இருபதாவது
ஸூத்ரம் வரைக்குமுள்ள, ஸர்வார்த்தஸித்தி,
ஸுகபோதை,
வியாக்கியானங்களிலும்; பதார்த்தஸாரத்தில் முப்பதாவது
அதிகாரத்திலும் விரிவாகப் பார்த்துக் கொள்ளலாம். (274)
1322. வைப்புநய னளவை வாயில் மார்க்கணை குணசீ வன்கள்
செப்பிய சுதத்திற் சென்று விகற்பமாஞ்
சதாதி யோடு
மெய்ப்பட வுணர்வை தோற்றின் வினைகளைக்
கெடுக்கு மென்று
பொய்ப்பறு பமாண மாகப் புண்ணியக் கிழவன் சொன்னான்.
(இ-ள்.) வைப்பு - (நாம
ஸ்தாபனா திரவிய பாவ ஸ்தன்யாஸஹா
என்கிற நாலுவிதத்தினால் ஆகும்படியான) நிக்ஷேபமும்,
நயன் -
(திரவியார்த்திக பரியாயார்த்திக நயங்களாலாகும் நைகம
ஸங்கிரக
வியவஹார ருஜுஸூத்ர சப்தஸமபீருட ஏவம்பூத நயாதிகளாலும்,
அத்தியாத்ம பாஷையாலும் ஏற்படும் உபசரிதானுப
சரிதாஸத்பூத
ஸத்பூத வியவஹார, சுத்த நிச்சய
அசுத்த நிச்சயமாகிய)
ஷண்ணயங்களும், அளவை - (திரவிய பிரமாண பாவப் பிரமாண
பிரத்தியக்ஷ பிரமாண பரோக்ஷப் பிரமாண லௌகீகப்
பிரமாணா
பரமார்த்தப் பிரமாணாதிகளா |