சமவசரணச்சருக்கம்615


 

லாகின்ற)   பிரமாணமும்,   (ஆகிய)   வாயில்  - இந்த நிக்ஷேபநயப்
பிரமாணத்   துவாராவாக, மார்க்கணை - (கதி, இந்திரிய, காய, யோக,
வேத, கஷாய, ஞான, ஸம்யம, தரிசன, லேசியா, பவ்விய, சம்மியத்துவ,
ஸஜ்ஞித்வ,   ஆஹாரமுமாகிய    சதுர்த்தச) மார்க்கணா ஸ்தானமும்,
குணம் - (மித்தியா   திருஷ்டி, சாசாதன ஸம்மியக் திருஷ்டி, மிசிரன்,
அஸம்யதஸம்மியக் திருஷ்டி, தேசசம்யதன், பிரமத்தன், அப்பிரமத்தன்,
ஆபூர்வகரணன்,     அனிவிர்த்திகரணன்,     ஸூக்ஷ்மஸாம்பராயன்,
உபசாந்தகஷாயன், க்ஷீணகஷாயன்,  ஸயோகிகேவலி, அயோகிகேவலி
என்கிற) சதுர்த்தசகுண ஸ்தானமும்,  சீவன்கள் (ஸூக்ஷ்ம ஏகேந்திரிய
பரியாப்தி அபரியாப்தி,   பாதர ஏகேந்திரிய   பரியாப்தி அபரியாப்தி,
த்வீந்திரிய பரியாப்தி அபரியாப்தி,   த்ரீந்திரிய பரியாப்தி அபரியாப்தி,
சதுரிந்திரிய பரியாப்தி அபரியாப்தி  அஸஜ்ஞி பஞ்சேந்திரிய பரியாப்தி
அபரியாப்திகளாகிய) சதுர்த்தச    ஜீவஸ்தானமும், (ஆகிய இவைகள்)
சுதத்தில் -  (கேவலஜ்ஞானியாகிய    அரஹந்த   பரம தேவனெனும்
ஜினேந்திரனால் திவ்யத்வனியாகிற)  சப்தத் துவாரத்தினால், செப்பிய -
சொல்லப்பட்டன,    இவை   சென்று   -  அந்த சப்தத் துவாராவாக
அடைந்து, (ஸ்ரீுதகேவலிகளாகிய  பாவ சுருத ஞான ஸம்பூர்ணர்களான
கணதராதி குருக்களால்),    விகற்பமாம்    -   ஸவிகல்ப நிர்விகல்ப
பேதமாகும்    (அதாவது :  திரவியாகமமாகி     கிரந்தரசனைகளால்
த்வாதசாங்க பரமாகமங்களாகச் சொல்லப்பட்டனவாகும்), சதாதியோடு
- (ஸத் - ஸங்கியா -     க்ஷேத்ர - ஸ்பரிசன - காலாந்தர - பாவ -
அல்ப - பகுத்துவங்களென்னும்)  ப்ரரூபணாபாவனையோடு, மெய்ப்பட
- உண்மையாக, உணர்வை   -  பாவசுருத ஞானமானது, தோற்றின் -
கர்மோபசமகாலலப்பதியினால்    உண்டாகுமேயானால், வினைகளை -
கர்மங்களை, கெடுக்குமென்று -   (ஆத்மன்) க்ஷயஞ் செய்து பரமாத்ம
ஸ்வரூபியாகுமென்று,     பொய்ப்பறு    -  குற்றமற்ற, பமாணமாக -
பிரமாணமாக,     புண்ணியக்  கிழவன்   -  தீர்த்தங்கரபரமதேவன்,
சொன்னான் -   திவ்யத்வனியால்  சொல்லிக் கணதராதியார்களுக்குத்
தெரிவித்தான், எ-று.

     இந்தப்        பாடலில்    சொல்லப்பட்ட  நிக்ஷேப,     நய
பிரமாணங்களையும்,     மார்க்கணாஸ்தான     -     குணஸ்தான -
ஜீவஸ்தானங்களையும்,  ஸத்ஸங்கியாதிப்ர ரூபணைகளையும், விவரமாக
அறியவேண்டில்,   பதார்த்தஸாரம் - சர்வார்த்த சித்தி - சுகபோதை -
ப்ராப்ரதத்திரயம்  -   கோமட ஸாரமாதியாகிய நூல்களைப் பார்த்தும்
குருமூலமாகக்    கேட்டுக்   பவ்வியர்கள்   பிரயத்ன    பூர்வகமாக
அறிந்துகொள்ளக்   கடமைப்பட்டு ஞானம் பெறுவது அத்தியாவசியம்.

     ‘உணர்வை" என்பதில் ஐ - சாரியை.                   (275)

 1323. அங்கபுவ் வாதி நூல்க ளாகமம் பமாண மாகுஞ்
      சிங்கிய மதிசு தங்கள் விபங்கமுந் தீய ஞான
      மங்கவை மூடஞ் சந்தே யம்விப ரீத மாகுந்
      தங்கிய சன்னிக் கிப்பாற் றானெலா மூட மாமே.