(இ-ள்.)
அங்கபுவ்வாதிநூல்கள் - த்வாதசாங்கம் -
சதுர்தச
பூர்வம் முதலாகிய சாஸ்திரங்கள், ஆகமம் - கணதராதி குருக்களால்
கிரந்த பூர்வகமாகச் செய்யப்பட்ட திரவியாகமங்களானவை, (ஆதலின்)
பமாண மாகும் - சுருத ஞானப்பிரமாணமாகும்,
சிங்கிய -
கர்மோதயத்தால் மாறுபாடாகிய, மதி -
குமதியும், சுதங்கள் -
குஸ்ரீுதிகளும், விபங்கமும் - விபங்கமாகிய அவதியும், தீயஞானம் -
மித்தியாஞானமாகும், அங்கவை - அவ்விடத்தில் அவைகள், மூடம் -
மூடமென்றும், சந்தேயம் -
சந்தேகமென்றும், விபரீதம் -
விபரீதமென்றும், ஆகும் -
மூன்றுவகையாகும், தங்கிய -
தரித்திராநின்ற, சன்னிக்கிப்பால் - ஸஜ்ஞிபஞ்சேந்திரிய ஜீவன்களுக்கு
இப்பால், (தாழ்ந்துள்ள,) தான் எல்லாம் - அஸஜ்ஞிபஞ்சேந்திரிய
ஜீவன் முதலாக உள்ள பதின்மூன்று
வகை ஜீவஸ்தான
ஜீவன்களெல்லாம், மூடமாம் - குமதி ஞானத்தையே யுடையனவாகும்,
எ-று.
இங்ஙனம் கூறியதனால் ஸஜ்ஞி
ஜீவன்களில் கருமோபசமத்தால்
ஸம்மியக் ஞானமும் கருமோதயத்தால் மித்தியா
ஞானமும்
வர்த்திக்கும், அஸஜ்ஞி ஜீவன்களெல்லாம் கருமோதயத்தினாலான
மித்தியா ஞானங்களிலேயே வர்த்திக்கும்; ஆகையால் கருமோபசம
க்ஷயோபசம க்ஷாயிக பரிணாமங்களின்றி ஸம்மியக்ஞானப்பிராப்தி
யாகாதென்பது பெற்படும்.
ஆறாவது ஸர்க்கம் 151 - வது பாடல்
முதல், 164 - வது பாடல்
வரைக்கும் ஸம்மியத்துவ லப்தமாகும்விதம் சொல்லப்பட்டிருக்கிறது.
ஸம்மியத்துவ பூர்வகமாகத்தான் ஸம்மியக்ஞானம்
ஏற்படும்.
பதார்த்தஸாரத்தில் 27-வது அதிகாரத்தில் சம்மியத்துவத்தைப்பற்றிய
விவரம் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
1324. அருத்தத்திற் காமத் தின்க ணவ்விரண் டகத்துஞ் சென்று
விருத்தத்தைத் தெளிவி லாமை விசதமா மூட
மாகு
மொருத்துழிச் செறித லின்றி யுலாவல்சந்
தேக மாகும்
விருத்தமா யுணர்தல் சொல்லல் விபரீத நயம
தாமே.
(இ-ள்.) (ஸஜ்ஞி
பஞ்சேந்திரிய ஜீவன்களும்) அருத்தத்தில் -
பொருள்களின் மேலும், காமத்தின்கண் -
காமராகத்தினிடத்தும்,
அவ்விரண்டகத்தும் - அந்த அர்த்தம் காமமாகிய
இரண்டிலும்,
சென்று - பரிணமித்துச் சென்று, விருத்தத்தை -
இவ்விரண்டின்
வேறாகிய தர்மத்தை, தெளிவிலாமை - தெரியாமல் நிற்பது, விசதமாம்
- வெளியாகிய, மூடமாகும் - மித்தியாஞானமாகிய
மயக்கமாகும்,
ஒருத்துழி - ஒருமித்தவிடத்தை, செறிதலின்றி
- அடையாமல்,
உலாவல் - பலவிதமான வியாபித்து தெளியாமல்
உலாவுவது,
சந்தேகமாகும் - சந்தேக ஞானமாகும், விருத்தமாயுணர்தல்
-
மாறுபாடாக அறிவதும், சொல்லல் - சொல்வதும், விபரீதநயமதாம்
- விபரீத நயமாகும், எ-று. |