சமவசரணச்சருக்கம்619


 

     (இ-ள்.) இறைவ ஸ்வாமியே!, வினை மன்னர் - கர்மமாகிற ராஜாக்கள், மிகுதற்கு - ஆத்மனிடத்தில் வந்து மிகுந்து பந்திப்பதற்கு, ஏது - காரணமானது, என்கொல் என்று - என்ன காரணம் என்று, அங்கு - அப்பொழுது, அறை - சப்தியாநின்ற, கழல் - வீரகண்டயத்தை யணிந்த, அரசர் - இராஜாக்கள், கேட்டார் - வினவினார்கள், அருந்தவர் - மேருமந்தர கணதரர்கள், உரைக்கலுற்று - சொல்லத் தொடங்கி, எட்டும் - ஞானாவரணாதியஷ்ட கர்மங்களும், நெறியினால் - கிரமத்தினால், தத்தம் - தங்கள் தங்களின், நிமித்தத்தை - காரணமாகிய அசுத்த சேதனா பரிணாமத்தை, நிறையப்பெற்று - நிறைதலாகப் பெற்று, செறிய - ஆத்மனிடத்தில் சேர்ந்ததனாலே, மிக்கு - அதிகாஸ்ரவமாகியும், அல்லது - அல்லாமல், ஈனம் - ஹீனாஸ்ரவமாகியும், ஆம் பந்தமாகும், அது - அந்தக்கர்மாஸ்ரவ காரணமான பரிணாமத்தை, செப்ப - சொல்ல, கேண்மின் - கேளுங்கள், எ-று. (282)

 1330. பரமனூல் பழித்தல் மாய்த்த லிடையுறல் பிழைக்க வோதல்
      குரவர்மா றாதல் சுருதங் கொண்டுழி கரத்தற் றீநூன்
      மருவுதல் துவர்க ணான்கின் ஞானமாச் சரிய முற்றும்
      பெருகிலா வரண ஞானக் காட்சியைப் பிணிக்கு மிக்கே.

     (இ-ள்.) பரமன் - அஷ்டாதசதோஷரஹிதனான ஜினேந்திரனெனும் அரஹந்த பரமதேவனது (அதாவது : அவனால் சொல்லப்பட்ட), நூல் - (திவ்விய பாஷாவாக் பிரவர்த்தியாகி கணதரரசித த்வாதசாங்காதி) பரமாகமங்களை, பழித்தல் - நிந்திப்பதும், மாய்த்தல் - நாசஞ் செய்தலும், இடையுறல் - விக்கினம் பண்ணுவதும், பிழைக்கவோதல் - அதன் கருத்துக்களை மாறுபாடாகச் சொல்லுவதும், குரவர் மாறாதல் - ஆசாரிய உபாத்தியாயாதி சுருதகுருக்களை மாறுபாடாகத் தூஷிப்பதும், சுருதங்கொண்டுழி - ஆகமத்தை வைத்துக்கொண்டிருந்த விடத்தும், கரத்தல் - வஞ்சனை செய்து பவ்வியோபகாரமாகச் செய்யாமல் மறைத்து விடுவதும், தீ நூல் மருவுதல் - மித்தியாவாகிய சாஸ்திரங்களைச் சேர்வதும், துவர்கள் நான்கில் - குரோத மான மாயா லோபங் ளென்னும் நான்கில், ஞானம் - சம்மியக் ஞானத்தின் மேல், மாச்சரியம் - பகையாவதும், (ஆகிய) முற்றும் - இவையாவும், பெருகில் - விருத்தியாகுமேயானால், (அதனாலே), ஆவரண ஞானக்காட்சியை - ஞானாவரணீய தர்சனாவரணீய மென்கிற கருமங்களை, மிக்கு - மிகுதியாக பிணிக்கும் - ஆஸ்ரவமாகி ஆத்மனிடத்தில் பந்திக்கும். எ-று. (283)

 1331. தன்முத லுயிரைக் கோறல் வருத்துதல் படைக ளேந்தி
      யின்னுயிர் நடுங்கச் சேற லெரியிட லுறுப்ப றுத்தல்
      வின்முத லீத லுள்ளம் வருந்தவெந் துயரைச் செய்தல்
      இன்னவை யிடரை யீனு மசாதவே தத்தை யீட்டும்.