62மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

   பறந்து வந்துநின் றிருவடி பரவுவ திதுவுன்
   சிறந்த தன்மையோ திருவறத் தியற்கையோ வருளே.

   (இ-ள்.)   இறந்த - கெட்ட, காதிகள் நான்மையும் - நான்கு காதி
கருமங்களும், அழிந்த - கெட்டு நீங்கின,அக்கணத்து - அப்பொழுது,
நான்மையும் - அனந்த சதுஷ்டயமும், நிறைந்த - நிறைந்தன, உடனே
-  அங்ஙனம்  நிறைந்தவுடனே, வானவர் - தேவர்கள், நிலைதளரா -
(தங்கள்   ஆசனங்கள்)   சலித்தல்   செய்ய,   பறந்து   வந்து   -
சீக்கிரமாகவந்து,   பரவுவது -   நின்னை   ஸ்துதிப்பதாகிய,  இது -
இந்தத்தன்மை, உன் - உன்னுடைய, சிறந்த - மேலான, தன்மையோ -
ஸ்வபாவமோ?, திருவறத்து - ஸ்ரீ :  ஜிநதருமத்தினது, இயற்கையோ -
ஸ்வபாவமோ?, அருள் - அருள்செய்து கூறுவாயாக, எ-று.

          ‘இயற்கையோசெப்பே? என்றும் பாடம். (129)

 130. குற்றமொன்றிலை யெனிற்குற்ற மூன்றுநீ யுரைத்தாய்
     பற்று நீயிலை யென்னிலு லோகமுன் பற்றாஞ்
     சுற்ற நீயிலா யென்னிலெவ் வுயிருமுன் சுற்ற
     மற்ற நீயில்லாய் முனிவர்கோ னாயதோர் மாயம்.

    (இ-ள்.)  (பெரியோர்  நினக்குக்  குற்றமில்லை  யென்கிறார்கள்;
அங்ஙனம்)   குற்றமொன்று  -  யாதொரு குற்றமும், இலையெனில் -
உனக்கில்லை   யென்றால்,   குற்றமூன்று  -   முக்குற்றத்தை,  நீ--,
உரைத்தாய்  -  சொன்னாய்,  (உனக்குப்  பற்றிலை  யென்கிறார்கள்.
அங்ஙனம்)  நீ--,  பற்றிலையென்னில்  -  எதையும் பற்றிலையானால்,
உலோகம்  -  மூன்று  லோகமும்,  உன் -  உனது,  பற்று  ஆம் -
ஞானமாகிய    பற்றில்    சிக்கியனவாம்,   (உனக்குச்  சுற்றமில்லை
யென்கிறார்கள்;    அங்ஙனம்)  நீ--,  சுற்றம் -  யாதொரு சுற்றமும்,
இலாயென்னில்   -  இல்லாதவனென்றால்,   எவ்வுயிரும்   -  ஸகல
ஜீவன்களும்,     உன்    -    உனது,    சுற்றம்   -  சுற்றமாகும்,
(இப்படியிருப்பதனாலே)  அற்றம் -  யாதொரு  சோர்வும், இல்லாய் -
இல்லாதவனாகிய,  நீ-,  முனிவர்   -  (முக்குற்றம்,   பற்று,  சுற்றம்
ஆகியவற்றைவிட்ட) முனிவர்களின், கோனாயது -   இறைவனாகியது,
ஓர் - ஒப்பற்ற, மாயம் - ஆச்சரியமாகும், எ-று. (130) 

 131. அறிவு நீயிலை யொன்றல தெமக்கவை யநேகம்
     பிறவி நீயிலை யாங்களோ பிறவியிற் பெரியோம்
     செறிவ தோர்கதி யுனக்கிலை யெமக்குநான் கிவற்றால்
     வறியை நீயெம்மை யாட்கொண்ட வசியிது பெரிதே.

    (இ-ள்.) நீ - உனக்கு, அறிவு - ஞானம், ஒன்றலது -  (கேவலக்
ஞானமாகிய)  ஒன்றேயல்லாமல்,  இலை  -  மற்றவிகற்ப ஞானங்கள்
இல்லை, எமக்கு -