620மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.)   தன்முதல் - தான் முதலாகிய, உயிரை - ஜீவன்களை,
கோறல்  -   கொலை   செய்கின்றதும்,   வருத்துதல் - உபஸர்க்கஞ்
செய்தலும்,   படைகள்   -   ஆயுதங்களை,  ஏந்தி - தரித்து, இன் -
இனிமையாகிய,   உயிர்   -   இதர ஜீவன்கள், நடுங்க - நடுக்கத்தை
யடையும்படியாக,   சேறல்   -    வேட்டை     முதலானவையாகிய
தொழில்களில்    செல்லுதலும்,   எரியிடல்    -    அக்கினியிட்டுக்
கொளுத்துவதும்,  உறுப்பு - அவயவங்களை, அறுத்தல் - சேதிப்பதும்,
வில்முதல்   -   வில்முதலாகிய   கருவிகளை, ஈதல் - கொடுப்பதும்,
உள்ளம்    வருந்த - பிற ஜீவன்கள் மனம் வருந்தும்படியாக, வெம் -
வெப்பம்   பொருந்திய,    துயரை    -   துன்பங்களை, செய்தல் -
செய்கின்றதும்,     (ஆகிய) இன்னவை - இப்படிப்பட்ட, குரூரசித்த -
குரூரகிருத்தியங்கள்,     இடரையீனும் - துன்பத்தைத்  தரும்படியான,
அசாத வேதத்தை    -    அசாத    வேதனீய கருமத்தை, ஈட்டும் -
ஆத்மனிடத்தில் பந்திக்கும், எ-று.                          (284)

 1332. உரைசெயத் குணங்க ளின்றிக் கருணையை யுள்ளிட் டேழு
      மருவிய மனத்தி னார்க ளுயிர்களின் வருத்த மோம்பித்
      துருநயத் தால்வந் தெய்துந் துன்பத்தைத் துணிய நூறிப்
      பெரியவின் பத்தை யாக்குஞ் சாதந்தான் பிணிக்கு மிக்கே.

      (இ-ள்.)   உரைசெய்த - சொல்லப்பட்ட, குணங்கள்  - குரூர
குணங்கள்,   இன்றி - இல்லாமல், (ஸமதாகுணமாகி),  கருணையை -
ஜீவதயாபரிணதியை,   உள்ளிட்டு  -  சேர்ந்து,  ஏழு - (காருண்யம்,
பிரஸன்னபாவம், குணானுராகம், தருமத்தியானப்  பிரவர்த்தி, பிரசஸ்த
பிரவர்த்தி,       ஸம்மியக்ஞானம்,       தபோனுப்பிரயோகமாகிய)
ஸத்பரிணாமங்களை,    மருவிய    -   சேர்ந்த,  மனத்தினார்கள் -
மனதுடையவர்கள்,    உயிர்களின்  -    ஜீவன்களின்,  வருத்தம் -
உபஸர்க்காதி கஷ்டங்களை,  ஓம்பி - சக்தியானுஸாரத்தினால்  நீக்கி,
துரு நயத்தால் - மித்தியா  நயத்தால், வந்தெய்தும் - வந்தடைகின்ற,
துன்பத்தை - துக்கத்தை,     துணிய நூறி - கெடும்படியாக விலக்க,
மிக்கு - மிகுதியாக,    பெரிய    வின்பத்தை - பெரிதாகிய அனந்த
ஸௌக்கியாதிகளை, ஆக்கும் - உண்டாக்கும்படியாகிய, சாதந்தான் -
ஸாதவேதனீய கர்மமானது, பிணிக்கும் - பந்திக்கும், எ-று.     (285)

 1333. அருகனா லயங்க ணூல்க ளறநெறி தமக்கு மாறாய்ப்
      பொருள்கடே றாது மாறாம் பொருளுரைத் தருக னாதிப்
      பெருமையைப் பொறாது குற்றம் பிறங்கினார் தமையி றைஞ்சல்
      மருவுமிச் சத்த மட்டி நெறிமயக் குறுக்கு மிக்கே.

     (இ-ள்.)  அருகன் - (காதிகர்மரஹித அனந்தஞான சகிதவீதராக
அரஹந்த     பரமதேவனான)     ஜினநாதனும்,     ஆலயங்கள் -
ஜினாலயங்களும்,    நூல்கள்  -  ஜினேந்திரப்பிரணீத ஆகமங்களும்,
அறநெறி தமக்கு   -   ஜினதர்ம மார்க்கமும், (ஆகிய) இவைகளுக்கு,
மாறாய்   -  விரோதமாகியும், பொருள்கள் - (ஆப்த ஆகம பதார்த்த