சமவசரணச்சருக்கம்621


 

முதலாகிய)  பொருள்களை, தேறாது - யதாஸ்வரூப மறியாமல், மாறாம்
- மாறு   பாடாகிய,  பொருள் - பொருள்களை, உரைத்து - சொல்லி,
அருகனாதிப்பெருமையை     -     ஜினேந்திரன்        முதலாகிய
பஞ்சபரமேஷ்டிகளாகிய ஆப்தர்களின் குணமஹாத்மியத்தை, பொறாது
- ஸஹிக்காமல்,    குற்றம்      பிறங்கினார்தமை   -   ராகத்வேஷ
மோஹத்தோடு   கூடி   நின்றவர்களை, இறைஞ்சல் - வணங்குவதும்,
(ஆகிய    இப்பரிணாமங்களினாலே),     மிக்கு    -      மிகவும்,
நெறியமக்குறுக்கும்   -   ஸம்மியக்த்வ மார்க்கத்தை மயங்கச்செய்யும்
படியான, மிச்சத்தமட்டி - மித்தியாத்துவ மென்னும் தர்சன மோஹனீய
பிரகிருதியானது, மருவும் - ஆத்மனிடத்தில் பந்திக்கும், எ-று.   (286)

 1334. ஒழுக்கத்தை யழித்தல் காயத் தூர்வன நிற்ப தம்மை
      யழித்திடல் கிளையிற் சேர்த னீக்குத லாதி யாலும்
      வழுக்கிலாச் செற்ற மார்வ மயக்கமா மையைந் தாலு
      மொழுக்கத்தை யழிக்கும் மோகமுடன் வந்து பிணிக்கு மிக்கே.

     (இ-ள்.)   ஒழுக்கத்தை   -    சத்சாரித்திரத்தை,  அழித்தல் -
கெடுப்பது,  காயத்து  -  சரீரங்களோடு கூடி, ஊர்வன நிற்பதம்மை -
திரஸ   ஸ்தாவர   ஜீவவர்க்கங்களை,    அழித்திடல் - ஹிம்ஸித்தல்,
கிளையிற்  சேர்தனீக்குதல் - அவையவைகளின் கூட்டங்களையடைய
வொட்டாமல்     தடுத்தல்,      ஆதியாலும்     -     முதலாகிய
துஷ்பரிணாமகிருத்தியத்தாலும், வழுக்கிலா - நீங்குதலில்லாத, செற்றம்
- த்வேஷமும்,   ஆர்வம் - ராகமும், மயக்கமாம் - மோஹமுமாகிய,
ஐயைந்தானும் - இருபத்தைந்து   விதமாகிய கஷாயாகஷாய பரிணாம
சாரித்திரமோஹோதயத்தாலும்,        ஒழுக்கத்தை      யழிக்கும் -
சாரித்திரத்தைக் கெடுக்கும்படியான,   மோகம் - சாரித்திரமோஹனீயப்
பிரக்கிருதிகள்,    உடன்  -  ஒரு  தன்மையாக, மிக்கு - மிகுதியாக,
பிணிக்கும் - பந்திக்கும், எ-று.                            (287)

 1335. மருள்செய்யும் வினைமுன் னெட்டின் மாற்றொணா வுதயத்
                                                 தாலும்
      பொருள்கொலை களவு பொய்யிற் புரிந்தெழு முவகை
                                            யாலுந்
      திரிவிதத் தீயி லைச்சை முறுக்கிப்பே ராரம் பத்து
      மருவுமா னிரைய வாயு மாற்றொணா வுதயத் தாலே.

     (இ-ள்.)   முன்   -   அனாதியாகவே, (பந்தித்து நின்று) மருள்
செய்யும்  - ஆத்மகுணத்திற்கு மயக்கத்தைச் செய்யும், வினை எட்டின்
- அந்த   அஷ்டவித     கருமங்களினுடைய,   மாற்றொணா - நீக்க
முடியாத,    உதயத்தாலும்    -  உதயத்தாலும், பொருள் - பரிக்கிரக
வாஞ்சையும்,  கொலை - ஜீவவதையும், களவு - திருட்டும், பொய்யில்
- அசத்தியமும்   ஆகிய   இவைகளில், புரிந்து - விரும்பி, எழும் -
எழுகின்ற,    உவகையாலும்     -   ஸந்தோஷத்தினாலும், திரிவிதத்
தீயிலைச்சை   -   (கிருஷ்ண   நீல  கபோதமென்கிற) அசுபலேசியா
பரிணாமத்   திரயத்தினாலும்,    முறுக்கி - பலமாகி, பேராரம்பத்து -
பகுவராம்ப   பரிக்கிரகத்தினாலும்,   மாற்றொணா   -    நீக்க முடி