622மேருமந்தர புராணம்  


 

யாத,   உதயத்தாலே   -   உதையத்தினால்,   மாநிரவாயு  - பெரிய
துன்பத்தைச்   செய்யும்படியான   நாகாயுஷ்ய கர்மமானது, மருவும் -
ஆத்மனிடத்தில் பந்திக்கும், எ-று.                          (288)

 1336. வஞ்சனை மனத்து வைத்து வாக்கொடு காயம் வேறாய்
      நஞ்சென வொழுக்கம் பற்றி நல்லொழுக் கழித்த லாலு
      மெஞ்சிடா மூட மாதி மூன்றுமிச் சுதயத் தாலுஞ்
      செஞ்செவ்வெவ் விலங்கி லுய்க்கு மாயுகஞ் செறிக்கு மிக்கே.

     (இ-ள்.)  வஞ்சனை - கபடத்தை,  மனத்து - மனதில், வைத்து -
வைத்துக்  கொண்டு,   வாக்கொடு - வசனத்தோடு, காயம் - சரீரமும்,
வேறாய்  -  வேறாகி,  நஞ்சென! - விஷம்போன்று பொல்லாங்காகிய,
ஒழுக்கம்   -    ஹிம்ஸாதிதுச்சாரித்திரத்தை,  பற்றி  -   பொருந்தி,
நல்லொழுக்கு  -  அஹிம்ஸாதிசத்   சாரித்திரத்தை, அழித்தலாலும் -
கெடுப்பதினாலும்,  எஞ்சிடா  -  குறைவில்லாத, மூடமூன்று - (லோக
தேவ   பாஷண்டமாகிய)   திரிமூடங்கள், ஆதி - முதலாகிய, மிச்சு -
மித்தி   யாத்துவகர்மத்தினுடைய, உதயத்தாலும் - உதயவசத்தினாலும்,
செஞ்செவ்வெவ்    விலங்கில்     -     ஸஜ்ஞி   அஸஜ்ஞிகளாகிய
திரியக்கதிகளிலே,   உய்க்கும்    -  செலுத்தும் படியான, ஆயுகம் -
திரியக்காயுஷ்யகர்மமானது,   மிக்கு   -   மிகுதியாக,   செறிக்கும் -
பந்திக்கும், எ-று.                                       (289)

 1337. மெய்ம்மையாந் தெளிவி லாகும் வென்றவர் குணத்து ளார்வஞ்
      செம்மைவான் கருணை மெய்ம்மை சிந்தையுட் கலக்க மின்மை
      யிம்மையாம் போகம் வேண்டா முனிவர்கட் கீத லாதி
      தம்மினாம் போக பூமி மக்களா யுகங்க டாமே.

     (இ-ள்.)   மெய்ம்மையாம்  தெளிவில் - உண்மை ஸ்வரூபத்தை
யறியும்படியான   ஸம்மியக்தரிசன சுத்தியினாலே,  ஆகும் - ஆகின்ற,
வென்றவர் - காதி அகாதி கர்மங்களை ஜெயித்தவர்களாகிய அரஹந்த
ஸித்த    பரமேஷ்டிகளின்   மேலும், குணத்துள் - நிச்சய வியவஹார
ரத்தினத்திரய   குணங்களின் மேலும், (ஆகின்ற) ஆர்வம் - பக்தியும்,
செம்மை   -   நடுவுநிலைமையும்,  வான் கருணை - ஹேயோபாதேய
விஜ்ஞான தயவும், மெய்ம்மை - ஸம்மியக்த்துவதிரடமும், சிந்தையுள் -
மனதுள்,  கலக்கமின்மை  - கலங்காத தர்மத்தியான சுக்லத்தியானாதி
ஸத்பாவனையும்,  இம்மை - இஹஜன்மத்து, ஆம் - ஆகின்ற, போகம்
- இந்திரிய   விஷய    போகங்களை,    வேண்டா   - இச்சிக்காது
வைராக்யபாவனாதத்பரர்களாகிய, முனிவர்கட்கு - முனிவரர் முதலாகிய
கணங்களுக்கு,    ஈதல்   -   ஆஹார ஒளஷத ஆவாஸ சாஸ்திராதி
தானங்களைக் கொடுப்பதும், ஆதிதம்மின் - முதலாகிய தான பூஜாதப
சீலபரிணாமாதிகள்,  ஆம் - ஆகின்ற, போக பூமி மக்களாயுகங்களாம்
- போக     பூமி     மனுஷ்யாயுஷ்ய     கர்மங்களை   பந்திக்குங்
காரணங்களாகும், எ-று.                                  (290)