சமவசரணச்சருக்கம்623


 

 1338. உரைத்தவிக் குணங்கள் மாய மொன்றிடி லந்தப் பூமி
      திரிக்கய வாயு வாகுஞ் செப்பிய குணங்கள் மாயம்
      பொருத்தமில் லாத போது மந்தமத் திமங்க ளாகில்
      வருத்தமில் கரும பூமி மக்களா யுகங்க ளாமே.

     (இ-ள்.)   உரைத்த  -  சொல்லப்பட்ட, இக்குணங்கள் - இந்த
தர்சன    விசுத்தியாதி    ஸம்மியக்துவ   ஸத்குணங்கள்,     மாயம்
மாயாச்சாரத்தை,   ஒன்றிடில் - பொருந்தினால், அந்தப் பூமி - அந்த
போகபூமியில்,  திரிக்கய வாயுவாகும் - திரியக்காயுஷ்ய காரணமாகும்,
செப்பிய    -    சொல்லப்பட்ட,    குணங்கள்   -  இந்த ஸத்குண
பாவனைகளில், மாயம் பொருத்தமில்லாதபோது - மாயாச்சார மில்லாத
காலத்தில்,   மந்தம்மத்திமங்களாகில்  -  பரிணாமங்கள் உத்கிருஷ்ட
மில்லாமல் மிருது  தர மத்தியதரமாகில், வருத்தமில் - ஸுஹகரமாகிய,
கரும   பூமிமக்களாயுகங்கள் - கர்ம  பூமி மனுஷ்யாயுஷ்ய கர்மங்கள்,
ஆம் பந்தமாகும், எ-று.                                  (291)

 1339. அறத்தெழு விருப்பி னாலு மான்றநற் காட்சி யாலும்
      வெறுத்தெழு மனத்தி னாலும் மிக்கநற் பொறையி னாலுஞ்
      சிறப்புடைச் சமத்தி னாலும் தேவர சாக்கும் பூமி
      பிறப்பினைச் சமைக்கு மக்க ளாயுகம் பிணிக்கு மிக்கே.

     (இ-ள்.)   அறத்தெழும்    -   தர்மத்தியானத்தில் உண்டாகிய,
விருப்பினாலும்   -    பிரீதியினாலும்,    ஆன்ற  - மேன்மையாகிய,
நற்காட்சியாலும்        -     ஸம்மியக்         தரிசனத்தினாலும்,
வெறுத்தெழுமனத்தினாலும் - ஸம்ஸார விஷய சுகதுக்கங்களில் விராக
பாவனை செய்யும் மனத்தாலும்,  மிக்க நற்பொறையினாலும் - மிகுந்த
நல்ல க்ஷமையினாலும்,  சிறப்புடை - மேம்பாடுடைய, சமத்தினாலும் -
சமத்வீபாவத்தினாலும்,     தேவரசாக்கும்   -  தேவர்களுக்கெல்லாம்
நாதனாகும்படியான,     தன்மையை      உண்டாக்கும்,     பூமி -
தர்மக்ஷேத்திரத்தில்,   பிறப்பினை   -  பிறக்கும்படியான (அதாவது :
ஸ்வாமித்துவம்    ஆகும்படியான) சரமதேஹப்பிறப்பை, சமைக்கும் -
உண்டாக்கும்     படியான,    மக்களாயுகம்     -        திவ்விய
மனுஷ்யாயுஷ்யமானது,    மிக்கு  -   உத்கிருஷ்டமாக, பிணிக்கும் -
பந்திக்கும், எ-று.                                       (292)

 1340. நெறியிவைப் பெறாதா ரந்த நிலத்துள விலங்கு மாவார்
      அறிவொன்று முதல்வி லங்குந் தெளிவிலா மனித ராகு
      மறுவிலாந் தெளிவி னாலே வாயுதே யுக்கள் சென்று
      செறியுமைம் பொறிவி லங்கில் சிறியதோர் கருணை யாலும்.

     (இ-ள்.)     நெறியிவை    -   இந்த நெறிகளை, பெறாதார் -
அடையாதவர்கள், சிறியதோர் கருணையாலும் - அற்பகுண தயவினால்,
அந்த நிலத்துள விலங்கு