624மேருமந்தர புராணம்  


 

மாவார்   -   அந்த   கர்ம   பூமியில்     திரியக்  காயுஷ்யபந்த
காரணமாவார்கள்,   அறிவொன்று  முதல் விலங்கும் - ஏகேந்திரிய
முதலாகச்       சதுரிந்திரியம்    வரையிலுள்ள      விலங்குகள்,
மறுவிலாந்தெளிவினாலே    -   மோஹபகுளத்தினாலாகிய சேதனா
வாஸனையினால்,    தெளிவிலா  மனிதராகும் - நீசமனுஷ்யாயுஷ்ய
கர்மமும் பந்திக்கும்,   வாயுதேயுக்கள்  - அந்த ஏகேந்திரியத்திலும்
வாதகாயிகதேஜஸ்  காயிகஜீவன்கள், (தங்கள் மோஹபகுளத்தினால்),
செறியுமைம்பொறி விலங்கில் - நீசமனுஷ்யாயுஷ்யங் கூட கட்டாமல்
ஏதோ ஒருக்கால் பஞ்சேந்திரிய அஸஜ்ஞி விலங்காயுஷ்ய கர்மத்தில்,
ஆகும் - பந்திக்கும், எ-று.

     உம்மைகள்    -    அசைப்பொருளன.  ‘ஆகும்"   என்பது
இரண்டிடத்துங் கூட்டப்பட்டது.                          (293)

 1341. விரதமில் காட்சி தீமை விரவிய வொழுக்க மார்வ
      மருவிய சரிதங் குத்தி சமிதைபன் னிரண்டு சிந்தை
      தருமமுந் தவமுந் தேவ ராயுகந் தன்னை யாக்கும்
      விரதசீ லங்கள் மிச்சம் விரவின தாலு மாமே.

     (இ-ள்.)  விரதமில்   காட்சி - அஸம்மியத ஸம்மியக்த்துவமும்,
தீமை   விரவிய  வொழுக்கம் - ஹோயோபாதேய விஜ்ஞானமில்லாத
அஜ்ஞான   சாரித்திரமும்,   ஆர்வமருவிய சரிதம் - இந்திரிய விஷய
பாக வாஞ்சையை விரும்பிய காமியார்த்தியாக பூஜாதபவிரதாதிகளாகிய
சரியையும்,   குத்தி   -   திரிகுப்தியும்,   சமிதை - பஞ்சசமிதிகளும்,
பன்னிரண்டு சிந்தை - த்வாதசானுப்பிரேக்ஷா பாவனையும், தருமமும் -
தசதர்மதத்பரத்துவமும்,   தவமும் - பாகியாப்பியந்தர பேத தபோனுப்
பிரயோகமும்,    தேவராயுகந்தன்னை   ஆக்கும்  -  உத்தம மத்திம
ஜகன்னிய   பேதமாகிய தேவாயுஷ்ய கர்மத்தை உண்டாக்கும், மிச்சம்
விரவினது   -  ஸம்மியக்துவ ரஹித மித்தியாத்துவ ஸஹிதமாகியதான,
விரத   சீலங்களாலும்   - விரத சீலாச்சாராதிகள் ஆகியவைகளாலும்
(அதாவது :  இப்பரிணாமங்களின் தீவ்ர மந்ததரத்தின் தரதமமாகவும்),
ஆம் - இது பந்திக்குங் காரணமாகும், எ-று.                 (294)

 1342. நற்குணம் பொறாமை தீய கதைகளை நவிற்ற னலல
      சொற்களை யுறழ்தல் தூய வொழுக்கின்மை துயர மெய்தல்
      குற்றத்தால் மனோவாக் காயங் கோட்டம் பொல் லாச்சி ரிப்பும்
      மற்றிவை பழித்தல் நாமம் பிணித்தலுக் கேதுவாமே.

     (இ-ள்.) நற்குணம் - ஸம்மியக்த்துவாதி குணங்களை, பொறாமை
- ஸஹிக்கமுடியாமையும்,    தீயகதைகளை   -    பொல்லாங்காகிய
சரித்திரங்களை,    நவிற்றல்    -    சொல்வதும், நல்லசொற்களை -
தர்மவசனங்களை, உறழ்தல் - நீக்கி விடுவதும், தூயவொழுக்கின்மை -
ஸத்சாரித்திர          மில்லாது          துச்சாரித்திர        பிர