சமவசரணச்சருக்கம்625


 

வர்த்தியும்,    துயரமெய்தல்   -    துக்கமடைதலும்,   குற்றத்தால் -
ராகத்துவேஷாதிகளால்,   மனோவாக்காயங்கோட்டம் - மனவசனகாய
மாறுபாடும்,  பொல்லாச்சிரிப்பும்  -   பொல்லாங்கை உண்டுபண்ணும்
ஹாஸ்யமும்,  (ஆகிய),   இவை - இவைமுதலாகிய   பரிணாமாதிகள்,
பழித்தல்  நாமம்  -  அசுபநாமகர்மம், பிணித்தலுக்கு - பந்திப்பதற்கு,
ஏதுவாம் - காரணமாகும், எ-று.

     மற்று - அசை.                                    (295)

வேறு.

 1343. தூய காட்சியுஞ் சுருக்கமில் வினயமு மிறப்பிலா வதஞ்சீல
      மாய நல்லுப யோகமும் வேக மாற்றிய தவந் தியாகஞ்
      சாய றிந்துசெய் சமாதிவை யாவச்ச மாவச்சந் தாழ்வின்மை
      மாய மின்னெறி விளக்கலுந் துளக்கின்றி யறத்துவச் சளத்தாழும்.

     (இ-ள்.)   தூயகாட்சியும்   -   தர்சனவிசுத்தியும், சுருக்கமில் -
குறைவில்லாத,   வினயமும்   -    சதுர்வித  விநயமும், இறப்பிலா -
அதிசாரமில்லாத,  வதம் சீலம் - சீலவிரதேஷு அனதீசாரமும், ஆய -
ஆகிய,   நல்   -   நன்மையாகிய,    உபயோகமும்  -  ஆபீக்ஷண
ஞானோபயோகமும்,  வேகம் - ஸம்வேகமும், ஆற்றியதவந்தியாகம் -
சக்தித   தபஸும் சக்தித  தியாகமும், சாயறிந்து - ஸன்மார்க்கமறிந்து,
செய் - செய்கின்ற,   சமாதி  -   ஸாது ஸாமாதியும், வையாவச்சம் -
வையாப்பிரத்திய   கரணமும், ஆவச்சம் - ஆவசியகா பரிஹாணியில்,
தாழ்வின்மை   -    தளராது   செய்கின்ற   தன்மையும், மாயமில் -
மாயாச்சாரமில்லாத,    நெறிவிளக்கலும்   -  மார்க்கப்பிரபாவனமும்,
துளக்கின்றி  - சலனமில்லாமல்,   அறத்துவச்சளத்தாழும் - பிரவசன
வத்ஸலத்துவமும், எ-று.                                 (296)

 1344. அறிவ னாகம மாசரி யன்பல சுருதிவ லாரன்புஞ்
      செறிய நின்றிடுந் தீர்த்தக ரத்துவஞ் செய்யுநற் றிருநாமம்
      மறுவி லிக்குண நல்லநற் குணத்தினில் வையகத் துயிர்தம்மைக்
      குறுகு நாமங்க ணல்லவை சாலவுங் குணநல்ல வைகளாலே.

     (இ-ள்.)   அறிவன்  ஆகமம் ஆசரியன் பலசுருதிவலாரன்பும் -
அருகத் பக்தியும் பிரவசனபக்தியும் ஆசாரியபக்தியும் பகுசுருதபக்தியும்
(ஆகிய   இந்த    ஷோடசபாவனா    பரிணாம     பூர்த்தியானது),
தீர்த்தகரத்துவம்    -    தீர்த்தகரநாம    மஹா    புண்ணியகர்மம்,
செறியநின்றிடும்    -    பந்திக்கின்றதற்குக்  காரணமாகி    நிற்கும்,
(அதுவல்லாமலும்),     நல் - நன்மையாகிய, திரு - அழகிய, நாமம் -
சுபநாமப்    பிரகிருதிகள்,   மறுவில்   - குற்றமில்லாத, இக்குணம் -
இப்போது    சொன்ன   குணமாகிய,    நல்ல   -   நன்மையாகிய,
நற்குணத்தினில்      -     சுபகுணத்தினாலும்,       வையகத்து -