இவ்வுலகத்தில், உயிர்தம்மை - ஜீவன்களை, குண
நல்லவைகளாலே -
சற்குண பாவனையாலே, சாலவும் - மிகவும், நல்லவை நாமங்கள் -
சுபநாமகர்மங்கள், குறுகும் - ஆத்மனிடத்தில் அடையும், எ-று. (297)
வேறு.
1345. பிறர்களைப் பழித்துத் தன்னைப் புகழ்ந்துடன் பிறர்க ணின்ற
மறுவிலாக் குணத்தை மாய்த்துத் தீக்குணம்
பரப்பி மாறாய்
நிறைவிலா நீச மாய வொழுக்கத்தைப் புகழ்ந்து நல்லோர்
நிறையுலா வொழுக்கங் காய்ந்தார் நீ கோத்
திரம தாகும்.
(இ-ள்.) பிறர்களை
- அன்னியர்களை, பழித்து - நிந்தித்து,
தன்னை - தன்னை, புகழ்ந்து - புகழ்ச்சிசெய்து, உடன் -
உடனே,
பிறர் கண்ணின்ற - அயலார்களிடத்துள்ள, மறுவிலா - களங்கமில்லாத,
குணத்தை - ஸத்குணத்தை, மாய்த்து -
கெடுத்து, தீக்குணம் -
பொல்லாங்காகிய குணத்தை, பரப்பி - விசாலமாக உண்டுபண்ணி,
மாறாய் - மாறுபாடாய், நிறைவிலா
- நன்மையில்லாத, நீச
மாயவொழுக்கத்தை - கெட்ட நடத்தையை, புகழ்ந்து
- துதித்து
விரும்பி, நல்லோர் - பெரியோர்களையும், நிறையுலா - நிறைவுபெற்று
வியாபித்த, நல்லொழுக்கம் - ஸத்சாரித்திரத்தையும்,
காய்ந்தார் -
கோபித்தவர்களுக்கு, நீசகோத்திரமது - நீசகோத்திர கர்மமானது, ஆம்
- பந்திக்குங் காரணமாகும், எ-று. (298)
1346. அறைந்தவிக் குணத்தின் மாறா யறிவனை யுள்ளிட் டாரை
யிறைஞ்சிநின் றொழுகல் தன்னை யிழித்தல்பார்த்
துண்ட னல்ல
வறம்புகழ்ந் திடுத றன்னைப் பொககஞ்செய்
யாமை தம்மாற்
பிறந்துல கிறைஞ்ச நிற்குங் கோத்திரஞ்
செறியு மென்றான்.
(இ-ள்.) அறைந்த
- சொல்லப்பட்ட, இக்குணத்தின் - இந்த
துர்க்குணங்களினின்றும், மாறாய் - வேறாகி, அறிவனை - அனந்த
ஞானஸ்வரூபனான அரஹந்த ஸித்த பரமாத்மனையும், உள்ளிட்டாரை
- அவர்களைத் தியானிக்கின்ற ஆசாரியராதி
மூவகையான
அந்தராத்மர் களையும், (அதாவது : பஞ்ச பரமேஷ்டிகளையும்),
இறைஞ்சிநின்று - வணங்கிநின்று, ஒழுகல்
- நடப்பதும்,
தன்னையிழித்தல் - தன்னை நிந்தித்தலும், பார்த்துண்டல்
- மஹா
முனிவராதியார் பிக்ஷாடனமாகவரும் வேளையைப்பார்த்து அக்காலம்
கடந்து தான் பொசிப்பதும், நல்லவறம் - அஹிம்ஸாதியாகிய
தயா
தருமத்தை, புகழ்ந்திடுதல் -
விரும்புவதும், தன்னை
பொக்கஞ்செய்யாமை தம்மால் -
தன்னை அலங்கரித்துப்
பொலிவுபண்ணாமையும் ஆகிய இப்பரிணாமங்களினால், பிறந்து
-
லோகத்திற்றோன்றி, உலகு - இவ்வுலகிலுள்ளயாவரும், இறைஞ்ச -
வணங்கும்படியாக, நிற்கும் -
நிலைபெற்றிராநின்ற, |