கோத்திரம் - உச்சைர் கோத்திர
கர்மமானது, செறியும் - பந்திக்கும்
காரணமாகும், என்றான் - என்று சொல்லினான், எ-று. (299)
1347. கொலையைக்கோ பித்துச் செய்யாக் கொடையினை யிடைவி லக்கா
விலையெனி னுவந்து நன்றென் றீந்துழிக் காய்ந்து நெஞ்சிற்
புலைசுதேன் கள்ளு மேவிப் பிறன்செல்வம்
பொறாது வவ்வ
வலைசெய்ய வந்த ராய மைந்தும்வந் தடையு
மென்றான்.
(இ-ள்.) (ஆத்மன்) கோபித்து
- ரௌத்திரத்தியான தத்பரனாய்,
கொலையை - ஹிம்ஸாத்யுபத்திரவங்களை, செய்யா
- செய்தும்,
கொடையினை - அன்னியர்களால் கொடுக்கின்ற தானம் முதலான
வியவஹார நிச்சயங்களை, இடை - மத்தியில், விலக்கா - தடுத்தும்,
இலையெனின் - (அப்படிப்பட்ட வியவஹார நிச்சயங்களில்
தான்
தடுத்து விக்கினம் செய்யும் பாஷ்யத்தைக் கேட்டுக்கொண்டு ஒருவன்
அசத்தியங்களில் தலையிட்டு) இல்லையென்பானாகில்,
உவந்து -
ஸந்தோஷித்தும், ஈந்துழி - (வியவஹாராதியின்படி
ஒருவன்)
கொடுக்குமிடத்து, நெஞ்சில் - மனதினால், காய்ந்து -
கோபித்தும்,
புலைசு - மாம்சங்களையும்,
தேன் - மதுவையும், கள்ளு -
கள்ளுமுதலானவைகளையும், மேவி -
பொருந்தியும், பிறன் -
அன்னியனுடைய, செல்வம் -
ஐஸ்வரியத்தை, பொறாது -
ஸஹிக்காமல், வவ்வ -
அபகரிக்கவும், அலைசெய்ய -
துன்பஞ்செய்யவும், (இவை யாதியாகிய
பரிணாமங்களால்),
அந்தராயமைந்தும் - ஐந்துவிதமாகிய அந்தராய கர்மங்களும், வந்து -
அந்த ஆத்மனிடத்தில் வந்து, அடையும் - பந்திக்கும், என்றான்
-
என்றும் சொல்லினான், எ-று. (300)
1348. சொன்னகா ரணங்கள் பாவ யோகத்தின் படியிற் சொல்லி
னுன்னலாம் படிய வல்ல வுரைக்கினுஞ் சொற்க
ளாற்றா
வென்னமுந் நாற்க ணத்துள் யாவரு மிறைஞ்சி
யேத்தித்
துன்னிய வினையை வெல்லத் தொடங்கினார்
பலரு மன்றே.
(இ-ள்.) சொன்ன
- சொல்லப்பட்ட, பாவகாரணங்கள் - இந்தச்
சேதனா பரிணாமங்கள், யோகத்தின்படியில் - மனவசன காயத்தினால்
ஆத்ம பிரதேச பரிஸ்பந்தங்கள் முதலியவைகளினால், சொல்லின்
-
சொல்லுமிடத்தில், உன்னலாம் படியவல்ல -
நினைக்கும்
தன்மையுடையனவல்ல, உரைக்கினும் -
சொல்லப்புகினும்,
சொற்களாற்றா - சொற்கள் பற்றாவாம், என்ன - என்று மேருமந்தர
கணதரர்கள் சொல்ல, முந்நாற்கணத்துள் - த்வாதசகணங்களிலிரா
நின்ற, யாவரும் - எவர்களும், இறைஞ்சி
- வணங்கி, ஏத்தி -
ஸ்தோத்திரம் பண்ணி, பலரும் - அனேகமான பேர்களும், துன்னிய -
சேர்ந்திராநின்ற, வினையை - கர்மங்களை,
வெல்ல - ஜெயிக்க,
தொடங்கினார் - ஆரம்பித்தார்கள், எ-று.
(301) |