632மேருமந்தர புராணம்  


 

களும்     ஸௌக்கியத்தை    யடையும்படியான,  உரைக்கணின்று -
தர்மோபதேச   வசனத்திற்பொருந்தி, உத்தமப்பொறையோடு - உத்தம
க்ஷமையென்கிற    தர்மத்துடன்கூடி,     ஓம்பினார் - அத்தருமத்தை
நழுவாமல் உபசரித்துப் போற்றினார்கள், எ-று.                (311)

1359. மார்த்தவத் தால்வளைந் தாரு யிர்க்கெலாம்
     பார்த்தறம் பகர்ந்துளம் பஞ்சின் மெல்லிய
     ரார்ச்சவத் தகம்புறம் மணிவி ளக்கிதொத்
     தூர்த்தமா யொருவகை யொழுகு நீரரே.

     (இ-ள்.)     மார்த்தவத்தால்   - உத்தம மார்த்தவ குணத்தால்
(அதாவது :  கர்வ ரஹித குணத்தினால்), வளைந்து - வணக்கத்தோடு
கூடியவர்களாகி,    ஆர் - நிறைந்திராநின்ற,      உயிர்க்கெலாம் -
ஜீவர்களையெல்லாம்,    பார்த்து   -    ஸமத்வீபாவமாக   நோக்கி,
அறம்பகர்ந்து - பவ்விய ஜீவன்களுக்கு தர்மோபதேசஞ்செய்து, உளம்
- மனமானது,     பஞ்சின் - பஞ்சைப்பார்க்கிலும்,     மெல்லியர் -
மிருதுவானகுணத்தையுடையவர்களாகி,       ஆர்ச்சவத்து - உத்தம
ஆர்ஜவமென்னும்    தர்ம   குணத்தினால், அகம் புறம் - உள்ளும்
புறமும்,     மணிவிளக்க தொத்து - ரத்தின தீபத்துக்குச் சமானமாகி,
ஊர்த்தமாய் - மேலான    ரிஜுபரிணாமமாகி,   ஒருவகை - ஒப்பற்ற
விதமாக,    ஒழுகும் - நடக்கின்ற, நீரர் - குணமுடையவரானார்கள்,
எ-று.                                                 (312)

1360. ஆர்வமுஞ் செற்றமு மயக்க மின்மையா
     லாருயிர்க் குறுதியல் லாத சொல்லிலா
     ரோர்விடத் தொருவிய புலத்தின் மீட்டுளஞ்
     சோர்விடத் துஞ்செலாத் தூய ராயினார்.

     (இ-ள்.) ஆர்வமும்    - (இஷ்ட  வஸ்துகளென்று சிலவற்றில்)
ராகமும்,    செற்றமும் - (அனிஷ்ட    வஸ்துக்களென்று சிலவற்றில்)
துவேஷமும்,     மயக்கம்     -   மோகமும்,      இன்மையால் -
இவர்கட்கில்லாமலாகிய    ஸம்மியக்துவ  குணவிருத்தியினால், ஆர் -
நிறைந்திராநின்ற, உயிர்க்கு - பவ்விய ஜீவன்களுக்கு,  உறுதியல்லாத -
உறுதியை    உண்டுபண்ணுதலில்லாத,    சொல்லிலார் - வசனத்தைச்
சொல்லாதவர்களாய்   உத்தம    சத்திய தர்மத்தையுடையவர்களாய்த்
தர்மோபதேசமொழியே  சொல்லா நின்றார்கள், ஓர்விடத்து - யாதொரு
பிரகாரத்தாலும்,    ஒருவிய - ஆகாதென்று  நீக்கிவிடப்பட்டிருக்கிற,
புலத்தின் - விஷய    வஸ்துக்களின்     மேல்,    மீட்டு - மறுபடி,
சோர்விடத்தும் - சோர்வுற்ற      விடத்திலும்,       உளஞ்செலா -
மனஞ்செல்லாத    திரடதர   தன்மையுள்ள, தூயராயினார் - உத்தம
சவுசமென்னும்     பரிசுத்த     தர்மகுண   முடையவர்களானார்கள்,
எ-று.                                                 (313)

1361. அறுவகைப் பொறிவழி படர்ச்சி நீங்கியு
     மறுவகைக் காயத்தை யருளி னோம்பியுஞ்