ஹிமத்காலங்கழிந்து), மரத்தைச் சேர - (வருஷாகாலத்தில்)
விருட்சத்தினுடைய அடியில் நின்று யோகம் தாங்க, (அப்போது), வான்
- மேகமானது, மகிழ்ந்து - இவர்களுடைய தபத்திற்கு மகிழ்ந்து,
பொழிந்த - மழையை (அபிஷேகஞ் செய்வது போல்) சொரிந்தன,
எ-று. (319)
1367. கூகைபேய் கவந்த மோரி டாகினி குலவுங் காடு
நாமாக நாகஞ் சீய முழுவைசேர் மலைமு ழஞ்சு
ஏகமாட்ய வேக மேவி யிராசமா சீயம் போல
யோகமே போக மாக வுவந்தவ ருறைந்து சென்றார்.
(இ-ள்.) (மேலும்), கூகை - கோட்டான்களும், பேய் - பேய்க்
கூட்டல்களும், கவந்தம் - தலையற்ற துண்டங்களும், ஓரி - குள்ள
நரிகளும், டாகினி - பூதங்களும், குலவும் - வியாபித்திராநின்ற, காடு -
சுடுகாடுகளிலும், நாகம் - நாகப் பாம்புகளும், மாநாகம் - பெரும்
பாம்புகளும், சீயம் - சிம்மங்களும், உழுவை - புலிகளும், சேர் -
தங்கும்படியான, மலை முழஞ்சு - பர்வத குகைகளிலும், ஏகமாய்
வேகமேவி - தனித்திருந்து ஏகாக்கிர சிந்தையாகிய ஆத்மத்
தியானத்தில் தீவிரதரமாகப் பொருந்தி, இராசமாசீயம்போல - ஒரு
சிறந்த ராஜஸிம்மத்தைப் போல, யோகமே - மனவசன காயத்தை
தியானத்தினாலடக்கலே, போகமாக - மிகுதியான சௌக்கியமாக,
உவந்து - சந்தோஷித்து, அவர் - அவர்கள், உறைந்து -
இவ்விதமாகத் தியானங்களில் பொருந்தி, சென்றார் - அம்மார்க்கத்தில்
செல்வாராயினார், எ-று. (320)
1368. இருதுநல் லயன மாண்டை யெல்லைசெய் திருந்து நின்று
மரீஇயமுக் கால யோகம் வழங்குமார்க் கத்தை விட்டுத்
திரிவித கரணந் தம்மைச் செறியவைத் தறிவை யூன்றிப்
பொருவிலார் சிந்தை யோகந் தன்னையே பொருந்தி னாரே.
(இ-ள்.) (பின்னரும்), இருது - இரண்டு மாஸகாலமும், நல் -
நன்மையாகும், அயனம் - ஆறுமாத காலமும், ஆண்டை - ஒரு
வருஷ காலமும், எல்லை செய்து - யோகத்தில் நிற்க இவ்வளவு
இவ்வளவு என்று பிரமாணம் பண்ணிப் பிரதிஜ்ஞை செய்து, இருந்து -
அவ்வளவு அவ்வளவு காலம் வரையிலும் தளராது யோகத்தில்
இருந்தும், நின்று - நிலையில் உறுதியாக நின்றும், மரீஇய -
இவ்விதமாகத் தக்க வண்ணம் சேர்ந்து கூடிய, முக்கால யோகம் -
ஆதபகால வருஷா கால ஹிமத் காலங்களில் செய்யும் யோகத்திலே,
வழங்கும் - செல்கின்ற, மார்க்கத்தை - காயக்கிரசமென்னும் பாஹ்ய
தப மார்க்கத்தை, விட்டு - ஒரு பொருட்டாக எண்ணாமல் விலகி,
திரிவிதம் - காயம் வாக் மன மென்னும் மூன்று விதமாகிய,
கரணந்தம்மை - அந்தக் கரணங்களை, செறிய வைத்து - ஆத்ம
தியானத்தில் சேரும்படியாக அடக்கி ஸ்தாபித்து, அறிவை - நிச்சய
ஸம்மியக் ஞானத்தை, |