சமவசரணச்சருக்கம்637


 

ஊன்றி  - உறுதிப்படுத்தி,  பொருவிலார் - உபமையில்லாத ஸம்மியக்
குணோத்   கிருஷ்ட பாவனா பலமுள்ள இவ்விருவர்களும், சிந்தை -
ஆத்மத்   தியானத்தில்,    யோகந்தன்னையே - மனவசனகாயத்தை
மிகவும் பலமாக    நழுவாமல் ஒன்றுபடுத்தலை, பொருந்தினார்கள் -
சேர்ந்தார்கள், எ-று.                                     (321)

1369. உடம்புயி ருறைவா ணேரென் றுடம்பைவிட் டுயிரைப் பார்த்தங்
     கடுந்துயர் வினைக ளவ்வா ளுருக்கொடு நெருப்பு யிர்க்கட்
     கெடும்பரி யாய மவ்வாட் கிட்டமா மென்ற வற்றைக்
     கடந்ததம் வடிவைக் காளங் கழன்றபொன் போலக் கண்டார்.

     (இ-ள்.) (அவ்வாறு பொருந்தியர்கள்), உடம்பு - சரீரமும், உயிர்
- ஆத்மனும்,     உறைவாள்    நேரென்று     - உறையும் வாளும்
போலுமென்று,    (அதாவது :    சரீரம்     உறையும் உயிர் வாளும்
போலுமென்று),    உடம்பை - சரீரத்தை,   விட்டு - வேறென்று பேத
பாவனை   பண்ணி விலக்கி, உயிரை - ஆத்மனை, பார்த்து - அதன்
ஸ்வகுணம்    இன்னதென்று    நோக்கி,    அங்கு - அவ்விடத்தில்,
அடுந்துயர்   -    வருத்தும்படியான       துக்கமாகிற, வினைகள் -
சரீராதியாகிய கர்மங்களென்னும், பரியாயம் - பரியாயங்கள், அவ்வாள்
- ஆத்மனாகிற   அந்த  வாளிடத்தே, உருக்கொடு - வடிவுகொண்டு,
அவ்வாள் - அவ்வாளிடத்தே    பற்றும்,   கிட்டமாம் - களிம்பாகும்,
உயிர்க்கண் - அவ்வாளாகிய  உயிரிடத்தே, (உண்டாகும்),  நெருப்பு -
சுக்கிலத்தியான மென்னும் அக்கினியால்,  கெடும் என்று - நீங்கிவிடும்
என்று, (சுக்கிலத்    தியானத்தால்   கர்மங்களை  நீக்கி), அவற்றை -
அந்தக்    கிட்டத்துக்கொப்பாகிய கர்மங்களை, கடந்த - நீங்கிய, தம்
வடிவை - தங்களுடைய சுத்தாத்ம திரவிய சொரூபத்தை, காளங்கழன்ற
- கிட்டகாளிதத்தினின்றும்   நீங்கிய, பொன் போல - ஸ்வர்ணத்தைப்
போல,    கண்டார்   - நிச்சய  ஸம்மியக்தர்சனத்தால் பார்த்தார்கள்,
எ-று.                                                 (322)

1370. மதிசுத மவதி யாமா வரணத்தி லறிவு மற்ற
     விதியறக் கெடவொன் றாகி யனந்தமாய் விரியுங் காட்சி
     பொதுவினா லறிவின் முன்பு புலத்தைக்கொண் டனேக மாய்த்தன்
     விதியறக் கெடவொன் றாகி விரியுமா றுன்னி னாரே.

     (இ-ள்.)   (அதன்மேல்),    மதி - மதிஜ்ஞானமும்,    சுதம் -
ஸ்ரீுதஜ்ஞானமும், அவதியாம் - அவதிஜ்ஞானமும், (ஆகிய இவற்றின்),
ஆவரணத்தில்    - ஆவரணீயங்களினாலும்,     அறிவுமற்ற - மற்ற
மனப்பரியயஞான            கேவல          ஞானங்களினுடைய
ஆவரணீயங்களினுதயத்தாலுமாகிய,      விதி - கர்மங்கள்,   அற -
முழுமையும், கெட - நீங்க,  ஒன்றாகி - ஒப்பற்றதாகி, அனந்தமாய் -
முடிவில்லாததாய், (ஆத்ம   ஸ்வரூபமாகிய ஸ்வபர பதார்த்த பரிசித்தி்
ரூபமாகி யாகாரமாகிய   ஸம்பூர்ண சுத்த ஞான குணமாய்), விரியும் -
விசாலிக்கின்ற, காட்சி - தர்சனமானது,