அலங்கரித்து, இலங்கும் -
விளங்கும், நல்லார் - ஸ்த்ரீமார்களை,
வடிவினால் - வடிவத்தினால், குழைய - மனம் தளர்ச்சி
யடையும்படி, வாங்கும் - அவர் மனதை கிரகிக்கும், தழல் -
பிரகாசம், உறும் -
அடைந்த, தன்மைத்து - தன்மையையுடையது, எ-று.
(133)
134. ஆங்கவ னுருவங் காணா வருந்தவன் சயந்த னந்தோ
வீங்கிய தவத்தி னான்மே லிவ்வுரு வாக வென்னா
நீங்கிய காட்சித் தாய நிதானத்தை நிறைய நின்றா
னோங்கிய வுலகம் வேண்டா துமிகொண்ட வொருவ னொத்தான்.
(இ-ள்.) ஆங்கு - அவ்விடத்தில், அவன் -
அத்தரணேந்திரனது,
உருவம் - வடிவத்தை, காணா - கண்டு, அரும் -
அரிதாகிய,தவன் -
தபசை யுடையவனாகிய, சயந்தன் - ஜயந்தனென்னும்
முனி,அந்தோ -
ஐயோ!, நீங்கிய காட்சித்தாய - நீங்கிய
காக்ஷியையுடையதாகிய
(அதாவது : சம்மியக் தரிசனமல்லாத),
நிதானத்தை - நிதான
சல்லியத்தில், நிறைய நின்றான் - நிறையும்படி
நின்றவனாய், வீங்கிய
- பெரிதாகிய, தவத்தினால் - யான் பண்ணிய
தபத்தினால், மேல் -
மறு சன்மத்தில், இவ்வுருவு - இப்படிப்பட்ட உருவம், ஆக -
எனக்கு
உண்டாவதாக, என்னா - என்றுநினைத்து, ஓங்கிய -
மேலாகிய,
உலகம் - உலகத்தை, வேண்டாது - வேண்டாமல், உமி -
உமியை,
கொண்ட - ஏற்றுக்கொண்ட, ஒருவன் - ஒருவனை,
ஒத்தான் -
நிகர்த்தான், எ-று.
(134)
135. அருந்தவந் தாங்கி மேரு வனையவர்க்
கேலு மாசை
துரும்பிடைத் தோன்று மேனுந் துகளினுஞ் சிறிய
ராவ
ரருந்தவ னிவனிற் கண்டா மாசையில்
லாமை யன்றோ
பெருந்தவ மாத லன்றேற் பிறவிவித்
துலர்த்த லன்றோ.
(இ-ள்.) அருந்தவம் - அரிதாகிய
தவத்தை, தாங்கி - தரித்து,
(அதனாலே), மேரு அனையவர்க்கு -
மஹாமேரு பர்வதத்துக்குச்
சமமாகிய பெருமையை அடைந்தவர்க்கும்,
ஏலும் - இசையும், ஆசை
- ஆசையானது, துரும்பிடை -
ஒரு துரும்பினிடத்தில்,
தோன்றுமேனும் - உண்டாகுமானாலும்,
(அவர்கள்) துகளினும் -
சிறுதுகளைப் பார்க்கிலும், சிறியராவர் -
அற்பராவார்கள், (இதனை)
அரும் - அரிய, தவனிவனில் -
தவத்தையுடைய இச்சயந்த
முனியிடத்தில், கண்டாம் - நாம் பார்த்தோம்,
பெரும் - பெரியதாகிய,
தவமாதல் - தபமாவது,
ஆசையில்லாமையன்றோ -
பரத்திரவியங்களில் விஷய
வாஞ்சையில்லாத தன்மையல்லவா?,
அன்றேல் - அப்படி இல்லாமல் (ஆசை
உண்டானால்), (அது) பிறவி
- ஸம்ஸாரப் பிறப்புக்கு, வித்து - விதையை,
உலர்த்தல் அன்றோ -
உலர்த்திச் சித்தப்படுத்துவதற்குச்
சமானமல்லவோ?, எ-று.
வித்தை,
விதைப்பதற்கு உலர்த்திப் பக்குவப்படுத்தல் இயற்கை.
(135)
|