த்விதீயஸமயத்திற்கெடுத்து, முகடுற - பெருமை பொருந்த, எழுந்த -
உண்டாகிய, சிந்தை - அந்த பிரதம சுக்கிலத் தியானத்தை,
(விருத்தியாக), முறுக்கி - பலஞ்செய்து, பின் - பிறகு மூன்றாவது
ஸமயத்தில், உருக்கழல்போல் - கொல்ல னுலையிலிரும்புருக்கும்
அக்னி போல், தொகையுடை - சேர்க்கையுடைய, பேடி
வேதந்தன்னையும் - நபும்ஸக வேதமென்னும் கர்மத்தையும்,
உடைத்திட்டு - கெடுத்து, இப்பால் - அதற்கிப்பால் நலாவது
ஸமயத்தில், எ-று. (331)
1379. முட்டைத்தீப் போல வெம்பும் மொய்குழ லார்தம் வேதங்
கெட்டபி னிரதி யாச்சம் பயமுவர்ப் பரதி சோகம்
விட்டவப் பொழுது வைத்தீப் போலெழும் புங்க வேத
மட்டவர் வேத நீத்த வணியட்டி முனிவ ரானார்.
(இ-ள்.) முட்டைத் தீப்போல - எருமுட்டையின் அக்னி போல,
வெம்பும் - வெதும்புகின்ற, மொய்குழலார் தம் வேதம் - ஸ்த்ரீ
வேதமென்னுங் கர்மமானது, கெட்ட பின் - நீங்கின பின்பு, (ஐந்தாவது
ஸமயத்தில்), இரதி ஆச்சம் பயம் உவர்ப்பு அரதி சோகம் - ரதி
ஹாஸ்யம் பயம் ஜுஹுப்ஸை அரதி சோகமென்னும் ஆறுபிரகிருதிகள்,
விட்ட - நீங்கிவிட்டன, அப்பொழுது - அந்த ஆறாவது ஸமயத்தில்,
வைத்தீப்போல் - வைக்கோலில் பற்றின அக்னி போல், எழும் -
வெதும்பி யெழுகின்ற, புங்க வேதம் - புருஷவேதமென்னும் கர்ம
பிரகிருதியையும், அட்டு - ஜயித்து, அவர் - அவ்விரு முனிகளும்,
வேதநீத்த - நவ நோகஷாயங்களை விலக்கி ஜயித்த, அணியட்டி
முனிவரானார் - அனிவிருத்திகரண குணஸ்தான முனிவர்களானார்கள்,
எ-று. (332)
1380. நல்லவாஞ் சலன கோத மானமா யுலோபந் தம்மைச்
சொல்லிய முறையின் மூன்று தானத்திற் றுவக்க றுத்துப்
புல்லிதா முலோபந் தன்னை வீழ்த்தந்த மூழ்த்தத் திற்பி
னெல்லையிற் சுத்தி பெற்றா ரிருபத்தெண் மோக நீத்தே.
(இ-ள்.) (அதன் மேல்), நல்லவாஞ்
சலனகோதமானமாயுலோபந்தம்மை - ஸஞ்ஜுவலன குரோதம்
ஸஞ்ஜுவலன மானம் ஸஞ்ஜுவலனமாயம் ஸஞ்ஜுவலனலோபமென்னும்
நாலு பிரகிருதிகளை, சொல்லிய முறையின் - சொல்லப்பட்ட வரிசைப்
பிரகாரம், மூன்று தானத்தில் - மூன்று சமயத்தில் (அதாவது : ஏழாவது
ஸமயத்தில் ஸஞ்ஜுவலன குரோதத்தையும், எட்டாவது ஸமயத்தில்
ஸஞ்ஜுவலனமானத்தையும், ஒன்பதாவது ஸமயத்தில் ஸஞ்ஜுவலன
மாயத்தையும், மூன்றுஸ்தானமாக), துவக்கறுத்து - சம்பந்தத்தை நீக்கி,
(இப்படி அனிவிர்த்தி கரணகுணஸ்தானத்தில் செய்து முடித்து அதன்
பிறகு ஸூக்ஷ்மஸாம்பராய குணஸ்தானகாலமாகிய), அந்த மூழ்த்தத்தில்
- அந்தர் முகூர்த்த காலத்தின் அந்திய |