தங்களெல்லாருக்கும் நாதனாக, (அமைத்து), சூழ்ந்து - சுற்றி நிறைந்து,
மாயிரும் - மிகவும் பெரிதாகிய, விசும்பும் - ஆகாயமும், மண்ணும் -
பூமியும், மறைய - மறையும்படியாக, வானவர்கள் - இந்திராதி ஸர்வ
தேவர்களும், வந்தார் - வந்தார்கள், எ-று. (339)
1387. முழங்கின முரச மெங்கும் முரன்றன சங்க முன்னே
யெழுந்தன ரேறு சீயம் யானைமா வேறி விண்ணோர்
விழுந்தபூ மாரி விண்ணை விழுங்கின பதாகை வெள்ள
மெழுந்தவேத் தரவங் கீர்த்தி யியம்பின காள மெங்கும்.
(இ-ள்.) எங்கும் - எவ்விடங்களிலும், முன்னே -
முதன்மையாக, முரசம் - பேரிகைகள், முழங்கின - சப்தித்தன, சங்கம்
- சங்கு வாத்தியங்களும், முரன்றன - ஒலித்தன, விண்ணோர் -
தேவர்கள், ஏறு - விருஷபத்திலும், சீயம் - ஸிம்மத்திலும், யானை -
யானைகளிலும், மா - குதிரைகளிலும், ஏறி - ஏறிக்கொண்டு,
எழுந்தனர் - (கேவல பூஜையை இவர்கட்குச் செய்யும்பொருட்டு
விரைந்து) சென்றார்கள், பூமாரி - புஷ்ப வருஷங்கள், !விழுந்த -
சொரியப் பெற்றன, பதாகை வெள்ளம் - துவஜக் கொடிகளின்
பெருக்கம், விண்ணை விழுங்கின - ஆகாயத்தை மறையப் பண்ணின,
ஏத்தரவம் - அரஹந்தஸ்துதியாகிய சப்தமும், கீர்த்தி - புகழொலியும்,
எழுந்த - வியாபித்தன, எங்கும் - எவ்விடங்களிலும், காளம் - சிறு
சின்னங்கள், இயம்பின - சப்தித்தன, எ-று. (340)
1388. அரம்பையர் நடம்பு ரிந்தா ரம்பர மரங்க மாக
நரம்பொலி பொலிந்த வெங்கு நண்ணினார் மண்ணை விண்ணோர்
கரங்களுங் குவிந்த கண்ணீர் பொழிந்தன காதி நான்மை
யுரங்கடிந் திருந்த வீர ருறுதுணை யடிப ணிந்தார்.
(இ-ள்.) அரம்பையர் - தேவ நர்த்தகிகள், அம்பரம் -
ஆகாயமே, அரங்கமாக - நாடக சபையாக, நடம்புரிந்தார்! -
நர்த்தனஞ் செய்தார்கள், எங்கும் - எவ்விடங்களிலும், நரம்பொலி -
வீணாவாத்தியாதி நரம்புக்கருவிகளின் சப்தமானது, பொலிந்த -
இனிமையாக நிறைந்தன, விண்ணோர்! - தேவர்கள், மண்ணை -
இப்பூமியில் - நண்ணினார் - அடைந்தார்கள், கரங்களும் -
அவர்களுடைய ஹஸ்தங்களும், குவிந்த - முகுளிதமாயின, கண்ணீர் -
ஆனந்தக் கண்ணீர்த் துளிகள், பொழிந்தன - சொரிந்தன, காதி
நான்மை - காதி சதுஷ்டயங்களின், உரம் - சக்தியை, கடிந்திருநத -
நீக்கி ஜெயித்திராநின்ற, வீரர் - அனந்த வீர்யத்தையுடைய இவ்விரு
கேவலிகளுடைய, உறுதுணையடி - பெருமை பொருந்திய இரண்டு
பாதங்களை, பணிந்தார் - வணங்கினார்கள், எ-று. (341) |