1389. பிண்டியுங் குடையுஞ் சீய வணையுஞ்சா மரையு மற்று
மண்டவர்க் கிறைய மைத்தா னன்னவர்க் குரிய வாற்றா
லுண்டற வமிர்தம் வந்தீங் குண்மினென் றொலித்த வூழி
கண்டவர் கழலை வாழ்த்திக் காமக்கோ டணைக ணின்ற.
(இ-ள்.) பிண்டியும் - அசோக விருக்ஷமும், குடையும் -
ஏகசத்திரமும், சீயவணையும் - சிம்மாஸனமும், சாமரையும் -
வெண்சாமரைகளும், மற்றும் - பின்னும் புஷ்பமாரி துந்துபி
முதலானவையும், அன்னவர்க்கு - அனகார கேவலிகளாகிய
அவர்கட்கு, உரியவாற்றால் - உரித்தான விதமாக, அண்டவர்க்கிறை -
தேவர்களுக்கதிபதியாகிய ஸௌதர்மேந்திரன், அமைத்தான் -
நிருமித்தான்,ஈங்கு - இவ்விடத்தில், அறவமிர்தம் - தர்மாமிருதமானது,
உண்டு - உண்டாயிருக்கின்றது, வந்து - பவ்வியர்களே வந்து,
உண்மின் - அனுபவியுங்கள், என்று - என்று, ஒலித்த -
திவ்வியத்துவனி சப்தித்தது, ஊழிகண்டவர் - அனாதியாகிய
கர்மங்களை ஜயித்து ஆத்ம ஸ்வரூபத்தைக் கண்டு அனந்த ஞான
அனந்த தர்சனங்களையுடைய இந்த மேருமந்தரர்களாகிய
இருபகவான்களுடைய, கழலை - பாதங்களை, வாழ்த்தி - தேவர்கள்
ஸ்துதிப்பதால், காமகோடணைகள் - அழகிய ஜயகோஷணைகள்,
நின்ற - நிலைபெற்றன, எ -று. (342)
1390. மந்தர மிரண்டைச் சூழ்ந்த தாதகி மலைகள் போல
விந்திரர் விஞ்சை வேந்தர் மண்ணவ ரேனை யோர்கள்
சுந்தர மலருஞ் சாந்துந் தூபமு மேந்தி மேரு
மந்தர நாமர் பாதம் பணிந்துவாழ்த் தோடே ழுந்தார்.
(இ-ள்.) தாதகி - தாதகீஷண்டத்வீபத்தில் இராநின்ற,
மந்தரமிரண்டை - இரண்டு மந்தர பர்வதங்களை, சூழ்ந்த - வேறு
வேறாகச் சூழ்ந்திராநின்ற, மலைகள், போல - குலகிரி பர்வதங்களைப்
போல, இந்திரர் - சதேந்திரர்களும், விஞ்சை வேந்தர் -
வித்தியாதரவரசர்களும், மண்ணவர் - பூமியரசர்களும், ஏனையோர்கள்
- மற்றுமுள்ள பவ்விய ஜீவர்களும், சுந்தரம் - அழகிய, மலரும் -
புஷ்பங்களும், சாந்தும் - சந்தனங்களும், தூபமும் - தூபதீபாதிகளும்,
ஏந்தி - தரித்து, மேருமந்தர நாமர் - மேருமந்தரரென்கிற
பெயரையுடைய பகவான்களுடைய, பாதம் - பாதங்களை, பணிந்து -
வணங்கி, வாழ்த்தொடு - ஸ்துதி செய்வதுடன், எழுந்தார் - எழுந்து
நின்றார்கள், எ-று. (343)
வேறு.
1391. வெருவுறு துயரொடு விழவெழு துயருங்
கருவுறு துயரொடு கடைவரு துயரும் |