மருவிய வுயிர்வினை மறுவற வருளும்
பொருவரு திருவடி புகழ்தர வடைதும்.
(இ-ள்.) (அவ்வாறெழுந்து நின்றவர்கள் மேலும் துதிக்கத்
தொடங்கி), வெருவுறும் - ஸ்வபாவத்தில் எப்போதும் பயத்தையே
யடைந்திரா நின்ற, துயரொடு - விலங்குகதி துன்பத்துடன், விழவெழு
துயரும் - எழும்பித் தலைகீழாக வீழ ஸதா உண்டாகும் நரககதி
ஸ்வாபாவிக துக்கமும், கருவுறு துயரொடும் - கருப்பத்திலடைகின்ற
மனுஷ்ய கதி துன்பமும், கடைவருதுயரும் - மரண காலத்தில்
மிகவுமடைகின்ற தேவகதி ஸ்வாபாவிக துன்பமும், மருவிய - இந்தச்
சதுர்க்கதி துன்பத்தில் சேர்ந்திராநின்ற, உயிர் - ஜீவன்களின், வினை
மறுவு - கர்மமாகிற களங்கமானது, அற - நீங்கும்படியாக, அருளும் -
திவ்வியத்துவனியால் தர்மோபதேசஞ் செய்கினற, பொருவரு -
உபமையில்லாத உங்களுடைய, திருவடி - அழகிய பாதங்களை,
புகழ்தர - எங்கட்குக் கீர்த்தி யுண்டாகும்படியாக, அடைதும் -
ரக்ஷணையாக அடைகின்றோம், எ-று. (344)
1392. பருதியி னொளிவெல பகைபசி பிணிகெட
வருவன மலர்மிசை மதனனை நலிவன
வுயிருறு தொடர்வற வெறிவன வுலகினி
லரியன பெரியநும் மடியிணை யடைதும்.
(இ-ள்.) பருதியின் - சூர்யனுடைய, ஒளி - ஜோதியையும், வெல
- ஜெயிக்கவும், பகை - சத்துருத்துவமும்,பசி -க்ஷுதாதியும், பிணி -
ரோகாதிகளும், கெட - நீங்கவும், மலர்மிசை - தேவநிர்மித
செந்தாமரைப்பூவின் மேல், வருவன - உலாவி - வருவனவும்,
மதனனை - மன்மதனை, நலிவன - வருத்துவனவும், உயிர் -
ஆத்மன்களிடத்தில், உறு - அனாதியாக விபாவத்தாலடைகின்றன,
தொடர்வு - பாவ கர்ம திரவியகர்ம நோகர்மங்களாகிய ஸம்யோக
ஸம்பந்தங்களை, அற - நீங்கும்படியாக, எறிவன - சேதிக்கின்றனவும்,
உலகினில் - லோகத்திலே, அரியன - பெறுதற்கரியனவும், பெரிய -
மாஹாத்மியமுடையனவும், (ஆகிய), நும் - உங்களுடைய, அடியிணை
- பாதங்களை, அடைதும் - சேர்கின்றோம், எ-று.
1393. முறைபொறி மறைகெட முழுதுமோர் கணமதி
லறியுநல் லறிவுடை யிறைவநும் மடியிணை
யுறுதவர் மனமிசை யுறைவன வுயிருறு
பிறவியை யறவெறி பெருமைய சரணம்.
(இ-ள்.) முறை - கிரமமாக அறியும்படியான, பொறி -
இந்திரியங்களாலாகிய ஞானமும், மறை - ஆவரணீயங்களும், கெட -
நீங்க, முழுதும் - ஸக |