சமவசரணச்சருக்கம்649


 

லார்த்த  ஸமூகத்தினையும், ஓர் கணமதில் - ஒரு ஸமயத்தில், அறியும்
- ஞாத்துரு   பரிசித்தியினாலேஞேயாவலம்பனமன்றி அறிகின்ற, நல் -
நன்மையாகிய,   அறிவுடை   - கேவல ஞானத்தையுடைய, இறைவ -
நாதனான  தன்மையடைந்தவரே, நும் - உங்களுடைய,  அடியிணை -
பாதங்கள், உறுதவர் - மஹா தபஸ்விகளுடைய, மனமிசை - மனதிலே,
உறைவன   -   தங்கும்யடியானவை     (அதாவது :   அவர்களால்
தியானிக்கும்படியான       நிலைமையையுடையன),         உயிர் -
ஸம்ஸாரஜீவர்கள்,    உறு    -    அடைந்திராநின்ற,   பிறவியை -
ஜனனமரணமான   அந்த   ஸம்ஸாரத்தை, அற  - நீங்கும்படி, எறி -
கெடுக்கின்ற,    பெருமைய    -     உயர்வையுடையன,  (ஆதலின்,
அப்பாதங்களே),   சரணம்   - இப்பொழுதெங்களுக்குப் புகலிடமாம்,
எ-று.                                                 (346)

1394. குலிகமோ டிகலுவ குவிமுலை புணருநர்
     தலைமையை நகுவன தவநெறி வருவன
     உலகினை யொருநொடி யகவையி னளகுவ
     மலைவில நிலையநும் மலரடி யடைதும்.

     (இ-ள்.) குலிகமோடு  - ஜாதிலிங்கக் குழம்பினோடு, இகலுவ -
செஞ்சந்தனாதிகள்    பூசப்பெற்று     ஒப்பனை செய்யப்பட்டமைந்த
செம்மையால்    எதிர்த்து அதனைத் தாழ்மைப்படுத்துவனவும், குவி -
திரட்சி   பொருந்திய,    முலை - ஸ்தனங்களைக் கண்டு மோஹித்து,
புணருநர் - காமத்தால் புணர்ச்சி செய்து தங்கியிரா நின்றவர்களுடைய,
தலைமையை   - இறைமையை,  நகுவன - சிரிப்பனவும், தவ நெறி -
தபோ நெறியில், வருவன - வரப்பட்டனவும், உலகினை - லோகத்தை,
ஒரு    நொடியகவையின் - ஒரு    க்ஷண  நேரத்திலே, அளகுவ -
பிரத்தியக்ஷ      ஞானத்தால்    பிரமாணிப்பனவும்,    மலைவிலா -
கெடுதலில்லாத,    நிலைய     -      கேவல       ஞானாதிகுண
நிலையினையுடையனவும்,   (ஆகிய), நும் - உங்களுடைய,  மலரடி -
மலர்ப்பாதங்களை, அடைதும் - அடைகின்றோம், எ-று.       (347)

1395. உயர்வற வுயரிய வுலகினி னுயிர்களின்
     அயர்வற வறவமு தருளுவ வமரர்கள்
     மயர்வற மணிமுடி யணிவன பணிவார்
     துயர்வற வெறியுதுந் துணையடி தொழுதும்.

     (இ-ள்.)உலகினின் - இந்த லோகத்திலே, உயிர்களின் - பவ்விய
ஜீவன்களுடைய,   அயர்வு    - வருத்தங்கள், அற - நீங்கும்படியாக,
அறவமுது    - தர்மா    மிருதத்தை,    அருளுவ -       ஈகின்ற
தன்மையுடையவைகளும்,  அமரர்கள் - தேவர்கள், மயர்வற - விபாவ
மயக்கங்கள்     நீங்கும்படியாக,      மணிமுடி யணிவன - அழகிய
கிரீடங்களில்    அணியத் தக்கனவும், பணிவார் - வணங்குவார்களின்,
துயர்வற    - துக்கங்களெல்லாம்    நீங்கும்படியாக, எறியும் - கர்ம
மலங்களைக் கெடுப்பன