(இ-ள்.)
அம் - அழகிய, மலர் - புஷ்பங்களையுடைய,
சோலையெல்லாம் - தோப்புகளெல்லாம், குழைகளும் - தளிர்களும்,
மலரும் - புஷ்பங்களும், செற்றி - நெருங்கி,
குயில்களும் -
கோகிலங்களும், மயிலும் - மயிற் பறவைகளும், ஆர்த்து - சப்தித்து,
மழையென - மாரியைப்போல, மதுக்கள் - மதுத்துளிகள், பெய்து -
சொரிந்து, வண்டோடு - வண்டுகளோடு, தும்பி - தும்பி இனங்களும்,
பாடி - கீதங்களைப்பாடி, விழைவுறும் -
விரும்பும்படியான,
தகையவாகி - அழகுடையனவாகி, வேண்டினார் -விரும்பினவர்களுக்கு,
வேண்டிற்று - இச்சிக்கப்பட்டவைகளை, ஈயும் - கொடுக்கும்படியான,
அழகுடை - அழகுவாய்ந்த, மரங்கள் - கற்பகத்தருக்களை, போன்ற -
ஒத்திருப்பனவாம். எ-று. (12)
13. மதியொடு மீன்க ணீல மணித்தலத் திருந்த வேபோற்
பொதியவீழ் கமல மாம்பல் பூத்தன பொய்கை யெல்லாம்
மதிமிசைக் கறுப்பின் வெண்டா மரைமிசை வண்டின் பாடல்
மதியன்ன முகத்தி னல்லார் வாய்ப்பண்ணி னெழுச்சித் தொன்றே.
(இ-ள்.) மதியொடு - சந்திரனோடு,
மீன்கள் - நட்சத்திரங்களும்,
நீல மணித்தலத்து - இந்திர நீலரத்தினத்தாலாகிய பூமியில், இருந்தவே
போல் - இருந்ததுபோல, பொய்கையெல்லாம் - குளங்களிலெல்லாம்,
பொதியவிழ்ந்த - கட்டவிழ்ந்த, கமலம் - தாமரையும்,
ஆம்பல் -
அல்லியும், பூத்தன -
புஷ்பித்தனவாம்; மதிமிசை -
சந்திரன்மேலேயிருக்கின்ற, கறுப்பின் - களங்கத்தைப்போல, வெண் -
வெளுப்பாகிய, தாமரைமிசை - தாமரைப் பூவின்மேல், (இருக்கின்ற)
வண்டு - வண்டுகளின், இன் -
இனிமையாகிய, பாடல் -
இசைப்பாடலானது, மதியன்ன - சந்திரன்போன்ற,
முகத்தின் -
முகத்தையுடைய, நல்லார் - ஸ்திரீகளது, வாய்
- வாயினால்
பாடப்பட்ட, பண்ணினெழுச்சித்து - கீதத்தினது
ஆரோகணம்
போன்றதாகிய, ஒன்று - ஒன்றாம், எ-று. (13)
14. அன்னமென் குருகு தாரா நாரைவண் டானங் கோழி
துன்னின பெடைக ளோடுந் துறந்தவு மழைத்த தோற்ற
மின்னரிச் சிலம்பி னல்லார் சில்லரி சிலம்ப வாடிக்
கன்னியாழ் பயிலுஞ் சாலை போன்றன கயங்க ளெல்லாம்.
(இ-ள்.) கயங்களெல்லாம்
- தடாகங்களெல்லாம், அன்னம் -
அன்னப் பறவைகளும், மென் - மிருதுவாகிய, குருகு - குருகென்னும்
ஒருவித நாரையும், தாரா - தாராவென்னும் புள்ளும்,
நாரை -
பெருநாரையும், வண்டானம் - வண்டானமென்னும் நாரையும், கோழி -
நீர்க்கோழியும் (ஆகிய நீர்வாழ் பறவைகளில்), பெடைகளோடும்
-
பெட்டைகளோடும், துன்னின - சேர்ந்திரா நின்றவைகளும், துறந்தவும்
- துணையைவிட்டு நீங்கினவைகளும், அழைத்த - குரல்விட்டுக்கூவித்
தங்கள் இணைகளை யழைத்ததனாலேற்பட்ட,
தோற்றம் -
விதத்தினாலே, மின் - |