72மேருமந்தர புராணம்  


 

 

     (இ-ள்.)   காணா  -   (இம்முனிவனைப்)  பார்த்து,  நின்ற  -
(வித்துத்தந்தனுக்கு)  ஸத்துவத்தில்  நின்ற, வேரம் - வைரபாவமானது,
கனற்ற -  (அதிகமாக) எரிதலைச்  செய்ய  (அதாவது :  உதயத்தைக்
கொடுக்க), மாணான் -  மாட்சிமைக்  குணமில்லாத  அவன், கடிது -
சீக்கிரமாக,  ஓடி  -  சென்று,  மாதவர்கோனை  -  முனிநாயகனான
சஞ்சயந்தனை, ஏந்தி - தூக்கி, கொடுவந்து - கொண்டுவந்து, சேணாறு
-  ஆகாயமார்க்கமாக,   ஓடும்  -   செல்லும்,  விமானம்  -  தனது
விமானத்தில், ஏற்றி -  வைத்து,  வேணார் - மூங்கில்களால் நிறைந்த,
வெள்ளிமலையின் - விஜயார்த்த  பர்வதத்தின், கீழ் -  தாழ்வரையில்,
இவட்பரதத்து -   இவ்விடத்திலுள்ள   பரதக்ஷேத்திரத்தில்,  செல்க -
செல்வாயாக,   என்றான்   -   என்று   அதனைச்   செலுத்தினான்,
எ-று.                                                   (9)

 150. வந்தான் குமுதா வதியு மரிநற் சுவணம் பொற்
     கந்தார் கயமும் வதிபின் வைத்த நதிமூன்றும்
     சந்தார் சண்ட வேகையு மாய நாமத்தின்
     ஐந்தா றுஞ்சென் றொன்றார் தடத்தி னடுவாக.

     (இ-ள்.)  குமுதாவதியும் - குமுதவதியும், அரி - ஹரியும், நல் -
நன்மையாகிய, சுவணம் -  ஸ்வர்ணமும்,  பொன் -  அழகிய, கந்து -
கல்ஸ்தம்பங்களில், ஆர் - கட்டும்படியான, கயமும் - கஜமும் என்கிற
மூன்றிலும்,வதி - வதியென்கின்ற சப்தத்தை, பின்வைத்த - பின்னாலே
வைக்கப்பட்ட,   நதிமூன்றும்   -   ஹரிவதி   ஸ்வர்ணவதி  கஜவதி
யென்கின்ற  மூன்று  நதிகளும்,  சந்து -  சந்தன மரங்களால், ஆர் -
நிறைந்த,  சண்டவேகையும் -  சண்டவேகையென்கிற ஆறும், ஆகிய,
நாமத்தின்  -  இப்பெயர்களையுடைய,   ஐந்தாறும்  -  இந்த   ஐந்து
நதிகளும்,   சென்று  -  போய்,  ஒன்றாம்  -  ஒன்றாகச்சேரப்பட்ட,
தடத்தின் - விசாலமாகிய  இடத்தினுடைய,  நடுவாக -  மத்தியத்தில்,
வந்தான் - வந்து சேர்ந்தான், எ-று.                         (10)

 151. சிந்தை முறுக்கி விமானஞ் செல்லா வகைநோக்கி
     அந்தத் தடத்தி னடுவே முனியை யவனிட்டு
     முன்செய் வினையா லவனம் முனியை முறுக்கினான்
     முன்செய் வினையின் மேலே முனியு முறுகின்றான்.

      (இ-ள்.)சிந்தை - மனதில், முறுக்கி - பலஞ்செய்து செலுத்தியும்,
விமானம் -  தனது  விமானமானது,  செல்லாவகை  -   அதற்குமேல்
போகாத   விதாயத்தை,  நோக்கி  -  பார்த்து,  அந்தத் தடத்தின் -
அவ்விடத்தின்,  நடுவே  -   மத்தியத்தில்,  முனியை  -  சஞ்சயந்த
முனியை,  அவன்  -  அவ்வித்துத்தந்தன்,   இட்டு  -  தள்ளிவிட்டு,
முன்செய் -  பூர்வத்தில் தன்னாற் பண்ணப்பட்ட, வினையால் - பாப