சஞ்யந்தன் முத்திச்சருக்கம் 73


 

வினையினால், அவன் - அவ்வித்துத்தந்தன்,  அம்முனியை  - அந்தச்
சஞ்சயந்தமுனியை,  முறுக்கினான்  - மிகவும் கோபித்து  உபசருக்கம்
பண்ணினான்,   முன்    -   பூர்வத்தில்,   செய்  -   செய்யப்பட்ட,
வினையின்மேலே  -   தனது   கருமங்களின்   மேலே,  முனியும் -
அம்முனிவரனும்,  உறுகின்றான் - தியானத்தை யடைகின்றவனானான்,
எ-று.

     முனிவரன்  உபசர்க்கம்  செய்யுமவனைக்  கோபியாது  அதற்கு
உண்மைக்காரணமாகிய தன் ஊழ்வினையை நினைக்கின்றான்.
(11)

 152. மத்தத் தந்தி வடிவாய் வீரன் மார்வத்துக்
     குத்தக் குறுகா மறியா வோடிக் கோன்மாவாச்
     சத்தி தண்டு தாரை வாள்வேல் தடியேந்தி
     எத்தா வெறியா விழியா தெழியா விடைந்தோடும்.

     (இ-ள்.) (மேற்கூறியபடி  உபசருக்கம்  பண்ணத்   தொடங்கிய
வித்துத் தந்தன்)   மத்தம்   -   மதம்பொருந்திய,   தந்திவடிவாய் -
யானைரூபமாகி, வீரன் - வீர புருஷனாகிய சஞ்சயந்த  முனியினுடைய,
மார்வத்து -  மார்பில், குத்த - குத்தும்படியாக, குறுகா - அடைந்தும்,
மறியா -  மறுபடி திரும்பி,  ஓடி - சென்று, சத்தி - சூலமும், தண்டு -
தண்டாயுதமும், தாரை -  கூர்மையாகிய, வாள் - வாளாயுதமும், வேல்
- வேலாயுதமும்,  தடி - தடியும், ஏந்தி - தரித்து, எத்தா - அடித்தும்,
எறியா -   வீசியும்,   விழியா  -   கண்ணைவிழித்தும்,   தெழியா -
கோபித்தும், இடைந்து - பின் வெகு தூரத்திற்சென்று, கோன்மாவாய் -
கொல்லும்படியான புலிரூபமாகி, ஓடும் - (இம்முனியின்மேற்) செல்லும்,
எ-று.                                                  (12)

வேறு.

 153. வாளெயி றிலங்க வங்காந் தரவமாய் வந்து தோன்றும்
     கோளரி யேறு மாகிக் குப்புற்றுக் குலுங்கத் தோன்றும ்
     நீளெரி கொளுவுஞ் சுற்று நிலம்பிளந் ததிர வார்க்குந்
     தோளினைத் துணிப்ப னென்று வாளினைச் சுழற்றித் தோன்றும்.

     (இ-ள்.) வாள் - ஒளிபெற்ற, எயிறு -பற்கள், இலங்க - விளங்க,
அங்காந்து -   வாயைத்திறந்து,  அரவமாய்  -  ஸர்ப்பமாகி, வந்து -
(முனியின் எதிரில்)  வந்து,  தோன்றும்  -  தோற்றுவான்,  1கோள் -
கொலைத்தொழிலையுடைய,   அரியேறுமாகி   -   ஆண்சிம்மமுமாகி,
குப்புற்று  -  குதித்து, குலுங்க  -   நடுங்கும்படியாக,   தோன்றும் -
தோன்றுவான்,  சுற்றும் -  எப்பக்கத்திலும்,  நீள் - பெரிதாகிய, எரி -
அக்கினியை,  கொளுவும்  - கொளுத்தும்,  நிலம் - பூமி,  பிளந்து -
பிளவுபட்டு,

___________________________________________________

1கோள் - கொலை யென்பது, சீவகசிந்தாமணி 264-ஆம் செய்யுளில்
"கோணினைக்குறித்து" என்பதாலுணரப்படும்.