76மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.)  எமக்கு -  எங்களுக்கு,  இவன் - இவனால், செய்த -
செய்யப்பட்ட,  குற்றம் - தப்பிதம்,  இல்லையென்று  -  யாதொன்றுங்
கிடையாதென்று,  இகழவேண்டாம்  -   என்    சொல்லை  இகழ்ந்து
தள்ளவேண்டாம்,  உமக்கு  -  உங்களுக்கு,  நான் -  நான், உறுதி -
உறுதி  வாக்கியத்தை,  சொன்னேன் -   சொல்லித்   தெரிவித்தேன்,
உரைத்ததும் -  இவ்வாறு சொன்னதும், பின்னை - பிற்பாடு, மெய்யாம்
-  உண்மையாகும்,   சுமக்கலாம்   -  தூக்கத்தகுந்த,   மலைகள்  -
பர்வதங்களை, ஏந்தி - தூக்கி, சொரிந்து - போட்டு, அவன்தன்னை -
அவ்விராக்கதனை,  கொன்மின் - கொல்லுங்கள்,  எமக்கு -  எமக்கு,
இவன்  -  இவ்வரக்கனால்,   செய்த  -  செய்யப்பட்ட,   இன்னா -
துன்பத்தை,    பின்னை    -     பிற்பாடு,    அறிந்துகொண்மின் -
தெரிந்துகொள்ளுங்கள், எ-று. உம் - அசை.                   (18)

 159. அரக்கனென் றுரைத்த மாற்றஞ் செவிப்புறத் துறலு மஞ்சா
     திரைத்தடித் தெழுந்து சென்று செறிதவன் பெருமை காணா
     அரக்கனே யிவனென் றஞ்சா வருந்தவ மறிவி லாதார்
     வரைத்திர ளேந்திச் சூழ்ந்தார் வானவர் நடுங்கி யிட்டார்.

     (இ-ள்.)   அரக்கனென்று  -  இராக்ஷதனென்று,  உரைத்த  -
சொன்ன,  மாற்றம்  -  வசனம்,  செவிப்புறத்து - காதினுள், உறலும் -
அடையவும் (அதாவது : கேட்ட மாத்திரத்தில்) செறி - நிறைந்த,தவன்
- தபஸையுடைய  முனிவரினது,   பெருமை  காணா  -  பெருமையை
உணராதவர்களும்,    அஞ்சா  -   எதற்குமஞ்சாமற்   செய்யப்படும்,
அருந்தவம்  - அருமையாகிய தபஸினது தன்மையை, அறிவிலாதார் -
தெரியாத  மூடர்களுமாகிய  பல  வித்தியாதரர்கள், அஞ்சா - பயந்து,
திரைத்து    -    கடலலைகளைப்போலத்   திரண்டு,   அடித்து   -
போர்ப்பறைகளை    அடித்து  முழக்கி, எழுந்து - கிளம்பி, சென்று -
அவ்விடம்   போய்,    இவன்   -   இவன்,   அரக்கனேயென்று -
இராக்ஷதனேயென்று,   வரைத்திரள்  -  பர்வதசமூகங்களை,  ஏந்தி -
தூக்கிக்கொண்டு,  சூழ்ந்தார்  - முனிவரனைச் சூழ்ந்துகொண்டார்கள்,
வானவர்  -   தேவர்களும்,   நடுங்கியிட்டார்   -   இதைப்பார்த்துப்
பயந்தார்கள், எ-று.                                       (19)

 160. மின்னொடு தொடர்ந்து மேகம் வெடிபட விடித்துத் தோன்றிப்
     பெரன்மலை தன்னைச் சூழ்ந்து புயலினைப் பொழிவ தேபோன்
     மின்னும்வெள் ளெயிற்றர் மேனிக் கரியவர் வெடிப்ப வார்த்துக்
     கன்மழை பொழிய வீரன் கனகமா மலையி னின்றான்.

     (இ-ள்.)  மின்னொடு - மின்னற்  கொடிகளோடு, தொடர்ந்து -
சேர்ந்து, மேகம் - மேகங்கள், வெடிபட - அதிர்ச்சிபடும்படி,இடித்து -
இடிகளையிடித்து,  தோன்றி  -   உண்டாகி,   பொன்மலைதன்னை -
மஹாமேருபர்வதத்தை, சூழ்ந்து -