சூழ்ந்துகொண்டு, புயலினை - மழையை, பொழிவதேபோல் -
சொரிவதுபோல், மின்னும் - பிரகாசியாநின்ற, வெள் - வெளுப்பாகிய,
எயிற்றர் - பற்களையுடையவர்களாகிய, மேனிக்கரியவர் - கறுப்பு
வர்ணத்தையுடைய வித்தியாதரர்கள், வெடிப்ப -கேட்டோர் செவி
வெடிக்கும்படியாக, ஆர்த்து - சப்தித்து, கல்மழை -
சிலாவருஷங்களை, பொழிய - சொரிய, வீரன் - வீரபுருஷனாகிய
சஞ்சயந்தமுனி, கனகமாமலையின் - மஹாமேருபர்வதம்போல்,
நின்றான் - சலனமின்றி யோகத்தில் நின்றான், எ-று. (20)
வேறு.
161.வந்த தானவர் வரையெடுத் தெறியவு மாதவஞ் சலியாதே
நின்ற தன்மையைப் பொறுக்கலா தான்செய்த வெறுப்பைமா தவனோக்கி
இன்றி வன்செய்த லெண்வினை கழிந்தபின் யாவர்க்கு மரிதாகும்
என்று சுக்கிலத் தியானவா ளெடுத்திடர் வினைப் பகையுடைக்குற்றான்.
(இ-ள்.) வந்த - அவ்வாறு வந்த, தானவர் - வித்தியாதரர்கள்,
வரையெடுத்து - பர்வதங்களைத் தூக்கி, எறியவும் - போடவும்,
மாதவம் - உத்கிருஷ்டமான தபஸில், சலியாது - சலனமில்லாமல்,
நின்ற - நிலைபெற்றிருந்த, தன்மையை - குணத்தை, பொறுக்கலாதான்
- சகிக்காத வித்துத்தந்தன், செய்த - இயற்றிய, வெறுப்பை -
த்வேஷத்தை, மாதவன் - சஞ்சயந்தமுனி, நோக்கி - பார்த்து, இன்று -
இப்பொழுது, இவன் - இவன், செய்தல் - செய்வது, எண்வினை -
அஷ்டகருமங்கள், கழிந்தபின் - நீங்கினபிறகு, யாவர்க்கும் -
எவர்களுக்கும், அரிதாகும் - இல்லாததாகும், என்று - என்றெண்ணி,
சுக்கிலத் தியானவாள் - சுக்கிலத்தியானமாகிற வாளாயுதத்தை, எடுத்து
- தரித்து, இடர் - துன்பம்பண்ணும், வினைப்பகை - கர்மமாகிய
சத்துருக்களை, உடைக்குற்றான் - கெடுப்பதற்கு உத்தேசித்துத்
தியானத்தில் பொருந்தினான், எ-று. (21)
வேறு.
162. வீரன் மேற்செலும் வெகுளிவெந் தீயினன் விரைந்தே
மாரி போற்பல மலையெடுத் தெறிந்தன னெறிய
வீரன் மேற்செலும் வெகுளியை விலக்கிப்பன் னூறு
வாரஞ் சென்றபின் பமத்தினைப் பறித்தெறிந் திட்டான்.
(இ-ள்.) வீரன் - வீரபுருஷனாகிய சஞ்சயந்தமுனியின், மேல் -
மேலே, செலும் - செல்லப்பட்ட, வெகுளி - கோபமாகிற, வெம் -
வெப்பம்பொருந்திய, |